வாஸ்து புருஷன்

2
531

“வாஸ்து புருஷன்” என்பவர் பிரம்மனால் படைக்கப்பட்ட ஒரு அசுரன். அவன் தேவர்களுக்குத் தொல்லை கொடுக்க அதனால், பிரம்மனுக்கும், அவனுக்கும் யுத்த நடந்தது. அந்த யுத்தத்தில் அசுரன் தேவர்களால் வெல்லப்பட்டு பூமியில் தள்ளபட்டான். அவன் மனம் திருந்தி பிரம்மனை வேண்டினான். அதனால் பிரம்மன் அவனுக்கு அருள் புரிந்து “வாஸ்து புருஷன்” என்று பெயரிட்டு, உலகில் கட்டப்படும் கட்டிடங்கள் அனைத்திலும் முதலில் வாஸ்து புருஷனுக்குப் பூஜை செய்து விட்டுத்தான் ஆரம்பிக்க வேண்டும் என்றும், அவன் சஞ்சரிக்கும் இடம் “வாஸ்து மண்டலம்” என்று பெயர் பெறும் என்றும் பிரம்மனால் ஆசி வழங்கப்பட்டது என்பது ஐதீமாகும்.
பொதுவாக எந்த நாட்டவராக இருந்தாலும் கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் போது அவரவர் வழக்கப்படி பூஜை செய்த பின்னரே, ஆரம்பம் செய்து உலக வழக்கமாக உள்ளது. அவ்வாறு பூஜை செய்யும் போது “வாஸ்து புருஷன்” விழித்திருக்கவேண்டும் என்பது ஐதீகம். இது பற்றிய பல கருத்துக்கள் பலதரப்பட்ட விதத்தில் நிலவுவதால் ஒரு சில குறிப்பிட்ட விவரங்களை மட்டும் நான் இங்கு உங்களுக்குத் தந்திருக்கின்றேன்.
நாம் கட்டிடம் கட்டும் இடத்தை மொத்த “64” பாகங்களாகப் பிரிக்கவேண்டும் அதில் படத்தில் காட்டப்பட்டுள்ளது போன்று வாஸ்து புருஷனின் உருவம் அமையப் பெறுகின்றது. பல தரப்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் படத்தை எளிமைப்படுத்தி உங்களுக்கு விளக்கம் தந்துள்ளேன்.

படத்தில் வாஸ்துபுருஷனின் உருவம் உள்ளது. இதில் அவரது தலை பகுதி வடகிழக்குப் பக்கத்திலும் வயிற்றுப்பகுதி மத்திய பக்கத்திலும் வலது கை வடமேற்கிலும், இடது கை தென்கிழக்கிலும், கைகளின் மணிக்கட்டுகள் முதுகுக்குப் பின்னால் பிரம்மஸ்தானத்திலும் கால்கள் இரண்டும் தென் மேற்கிலும் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது.
இந்த படத்தில் 1,2,3,4, ஆகிய நான்கு பகுதிகளும் பிரம்மஸ்தானம் ஆகும். மொத்தமுள்ள 64 பகுதிகளிலும் மத்தியில் உள்ள நான்கு பகுதியே பிரம்மஸ்தானம் ஆகும். இந்த பகுதியில் நாம் வீடு கட்டும் போது காலியாக விட்டுவிட்டு கட்ட வேண்டும். (அதாவது மத்திய ஹால் அங்கு வர வேண்டும் அல்லது எந்த தடுப்புச் சுவரும் இல்லத இடம் இருக்கவேண்டும்) என்று “வாஸ்து சாஸ்திரம்” சொல்கின்றது. இந்த இடத்திற்கு பிரம்ம தேவன் வந்து அருள்புரிவதாக வாஸ்து சாஸ்திரம் சொல்கின்றது.

vastupurushan
வாஸ்து புருஷன் விழித்திருக்கும் வேளையில்தான் கட்டிடம் கட்ட பூஜை செய்யவேண்டும். வாஸ்து புருஷன் சில நாட்களில் தான் விழித்திருப்பதாகவும், சாப்பிட்டுபின் தாம்பூலம் தரிப்பதாகவும் அந்த வேளையில் பூஜை செய்வது நல்லது என்பது ஐதீகம்.
வாஸ்து புருஷன் விழித்திருப்பதாக சொல்லப்படுவது இரண்டு விதமான நிலவுகின்றது. வருடத்தில் நாட்களில் சித்திரை 10 ந் தேதி, ஆவனி மாதம் 6 ந் தேதி, ஐப்பசி மாதம் 11 ந் தேதி, கார்த்திகை மாதம் 8 ந் தேதி, தை மாதம் 12 ம் தேதி, மாசி மாதம் 22 ந் தேதி என்பது ஒரு சிலரின் கருத்து. வேறு சிலர் தினமும் விழித்திருப்பதாகச் சொல்கின்றனர். இரவு நடுநிசியில் இருந்து காலை 3 மணி வரையில் கிழக்கு நோக்கியும், காலை மணி 6 முதல் 9 மணி வரை மேற்கு நோக்கியும், 9 மணி முதல் 12 மணி வரை வடக்கு நோக்கியும் கடிகார முள் சுற்றும் திசையில் அசைந்து வருவதாகவும் பூஜை செய்து நிலை வைக்கும் போது வஸ்து புருஷன் அத்திசை நோக்கிய நேரத்தில் வைக்கவேண்டும் என்று மனையடி சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. வேறுசிலர் வருடத்திற்கு ஒரு முறை ஒரு சுற்றுபூர்த்தி அடைவதாக நம்புகின்றனர். இவ்வாறு பல தரப்பட்ட கருத்துக்கள் நிலவுவதால் சிறந்த முறையை நாம் பின்பற்றி நல்ல நேரத்தில் பூஜை ஆரம்பம் செய்ய ஏற்பாடுகள் செய்து கொள்ள வேண்டும்.
வாஸ்து புருஷனின் தலைப்பகுதி ஈசான்யத்தில் (வடகிழக்கு) அமைவதை கவனியுங்கள். எனவே தான் நாம் அப்பகுதிக்கு முக்கியத்துவம் தருகின்றோம். ஒரு மனிதனின் அனைத்து செயல்களுக்கும் பிறப்பிடம் மூலையில் இருந்து செய்லபடுவது போல் ஒர் மனையின் அனைத்து செயல்களும் வாஸ்து புருஷனின் தலை இருக்கும் ஈசான்ய பகுதியில் இருந்து தான் பெறப்படுகின்றது.

இந்த பூமியில் ஏற்படும் காந்த சக்தியின் சுழற்சி வடகிழக்கில் ஆரம்பித்து தென் மேற்கில் முடிவடைகின்றது. எனவே நாம் வடகிழக்கில் காலியிடம் நிறைய விடுவதன் மூலம் அந்த சக்தியை அதிகம் பெறவும் சூரியக் கதிர்களின் மூலம் அந்த நம்மிடத்தில் சேமித்து வைக்கவும் உதவுகின்றது. மேலும் தென் மேற்கில் உயரமான கட்டிடங்கள் கட்டிவதன் மூலம் வடகிழக்கில் சேமிக்கப்பட்ட சக்தி அனைத்து இடங்களுக்கும் பரவி கடைசியில் தென்மேற்கில் உறைவதற்கு ஏதுவாக அமைகின்றது. மேலும் வடகிழக்கில் கீழ் நிலை நீர்த்தொட்டி, கிணறு ஆழ்நிலை கிணறு இவைகளின் மூலம் மேலும் ஏதுவாக அமைகின்றது.
மனிதனின் தலை முதல் பாதம் வரை ரத்த ஒட்டம் எவ்வாறு நிகழ்கின்றதோ அவ்விதமே “வாஸ்து புருஷன்” எனப்படும் மாய உருவத்திலும் வடகிழக்கு எனும் தலை பகுதி முதல் தென் மேற்கு எனப்படும் கால் பகுதி வரை சக்திகளின் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
எனவே வடகிழக்கில் அதில் இடம் விடுவதன் மூலம் “வாஸ்து புருஷனின்” சக்தியை நாம் அதிகப்படுத்தி, அதன் மூலம் நாம் பலவிதமான சக்திகளை பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்துடனும், சகல செல்வங்களுடனும் வாழ்வது உறுதி.

Advertisements

Leave a Reply