மனைகளும் அதை ஒட்டிய சாலைகளும்

0
596
DCIM100MEDIADJI_0100.JPG

நாம் வாங்கும் மனையின் ஒரு புறத்தில் மாத்திரம் சாலை இருந்தால் அதை சிறப்பானதாகவே கருத வேண்டும். நான்கு புறமும் சாலை இருந்தால் மிகவும் சிறந்ததாகும்.
நாம் வாங்கும் மனைக்கு மேற்கு, வடக்கு இரண்டு பக்கம் ரோடு இருந்தால் இது வாயுவிய மனை என்று அழைக்கப்படுகின்றது.

மனைக்கு வடக்கு, கிழக்கு இரண்டு பக்கம் ரோடு உள்ளவை ஈசான்ய மனை என்று அழைக்கப்படுகின்றது. இது மிகவும் சிறந்ததாக கருதப்படுகின்றது.
இவ்விதம் கிழக்கு தெற்கில் தெருவுள்ள மனை ஆக்கினேய மனை எனப்படுகின்றது இதை வாங்கலாம். ஆனால் வீடு கடடும் போது கவனித்து வாஸ்து விதிகளின்படி கண்டிப்பாக கட்ட வேண்டும் .

மேற்கு பக்கம் தெற்குப் பக்கம் தெரு உள்ள மனை வாங்கும் போது கவனித்து வாங்க வேண்டும். வாஸ்து விதிகளின்படி அனைத்தும் பொருந்தியிருந்தால் வாங்க வேண்டும். இல்லையேல் கண்டிப்பாக தவிர்த்து விட வேண்டும். வியாபார ஸ்தலங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின்படி அமைப்பு இருந்தால் தான் பலன் பெற முடியும்.
மூன்று பக்க சாலை உடைய மனைகள்
கிழக்கு பக்கம் சாலை இல்லாமல் வடக்கு, தெற்கு, மேற்கு பக்கம் சாலை உடைய மனை சிறந்தது அல்ல.
வடக்கு பக்கம் சாலை இல்லாமல் மேற்கு, கிழக்கு, தெற்கு சாலை உடைய மனைகள் வாங்கலாம். மத்திம பலனாகவே கருத வேண்டும்.
மேற்கு பக்கம் சாலை இல்லாமல் மற்ற திசைகளில் சாலை உடைய மனை வாங்கலாம்.

Advertisements

Leave a Reply