குழிநீர் சொல்லும் பலன்கள்

0
257

மனையில் குழிதோண்டி அதில் நீர் ஊற்றிவைத்து அதன் மூலமாகவும் பலன்களைத் தெரிந்து கொள்ளலாம். வீடு கட்டும் மனையில் ஒரு சதுர அடி இருக்கும் அளவில் குழியொன்றைத் தோண்ட வேண்டும். மாலையில் சூரியன் அஸ்தமனாகும் சமயத்தில் அக்குழி நிரம்புமளவு நீர் ஊற்றி வைக்க வேண்டும்.

மறுநாள் அதிகாலையில் சூரியன் உதயாமகும் போது வந்து குழியில் நிறைந்திருக்கும் நீரைக் கவனிக்க வேண்டும். நீர் கொஞ்சமும் வற்றாமல் இருந்தால் அங்கு வீடு கட்டி வாழ்பவர்களுக்குச் சிறப்பான பலன்களாக நடைபெறும். அதே போல் அதிகமாக நீர் வற்றிப் போனாலும் சிறப்பான பலன்களாகவே நடைபெறும்.

குழியில் நீரானது பாதியளவு வற்றீப் போயிருந்தால் அங்கு வீடு கட்டுவதென்பது எளீதான காரியமாக இராது. பல பிரச்சனைக்களைச் சாமர்த்தியமாகச் சமாளீக்க வேண்டியிருக்கும். நீரானது முழுவதுமாக வற்றீப் போய் இருந்தால் அங்கு வீடு கட்டுபவர்களூக்குத் தீயபலன்களாக நடைபெறும் .

குழியில் ஊற்றப்பட்ட நீர் முழுவதுமாக வற்றிப்போனதுடன் குழியின் உட்பக்கத்தில் வெடிப்பும் காணப்பட்டால் அங்கு வீடு கட்டுபவர்கள் காலம் முழுவதும் வியாதிகளால் மோசமாகப் பாதிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்கள் எனவே அங்கு வீடு கட்டுவது உசிதமல்ல.

Advertisements

Leave a Reply