அறையின் நீள – அகலம் ( மனையடி )


மனையடி சாஸ்திரத்தில் சொல்லப்படும் அறையின் நீள, அகலங்கள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் பலவித கருத்துக்கள் நிலவுகின்றது. அறையின் நீள அகலத்தினால் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை என்று சிலரும் அதனால் பாதிப்பு உண்டு என்று சிலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 10 X 10 என்ற சதுர அமைப்பில் இருக்கக் கூடிய ஐம்பூதங்களில் (five eliments) விகிதாச்சாரம் (%) 17X10 என்ற நீண்ட சதுர அமைப்பிலும் அவ்வாறே இருக்கும். ஆனால் 10 X 10 என்ற இடத்தில் இருக்கும் ஐம்பூதங்களின் (கொள்ளளவு ) அளவும் 17 X 17 என்ற நீண்ட தூர சதுர அமைப்பில் இருக்கும் கொள்ளளவும் நிச்சயம் மாறுபட்டதாகும். எனவே இந்த அடி கணக்குகள் ( நம் முன்னோர்கள் தங்களது வாழ்வில் அனுபவ பூர்வமாக கண்டு எழுதி வைத்தது ) நாம் உபயோகித்துக்கொள்வது தவறு அல்ல! ஆனால் அடிக்கணக்கு எவ்விதம் எடுக்க வேண்டும் என்பதை கீழே அளவுகளில் பார்க்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கின்றேன்.

அடி அளவு பலன்கள் நன்மை

7 தரித்திரம்.
8 மிகுந்த பாக்கியம் உண்டாகும்.
9 பீடை.
10 ஆடு, மாடுகள் முதல் அனைத்து செல்வமும் உண்டு.
11 புத்திர சம்பத்து நிச்சயம் உண்டு.
12 செல்வம் அழியும்.
13 பகைமை கூடும், பொருள் இழப்பு ஏற்படும்.
14 நஷ்டம்,விரயம் சபலம்.
15 மனக்கிலேசம்.
16 மிகுந்த செல்வம் உண்டு.
17 அரசன் போல் வாழ்வு.
18 அனைத்தையும் இழப்பர்.
19 உயிர் நஷ்டம்.
20 இராஜ யோகம் ,இன்பம்.
21 வளர்ச்சி, பால் பாக்கியம் ,பசுவிருநத்தி.
22 எதிரி அஞ்சுவான்.
23 நோய், கலக்கம்.
24 பரவாயில்லை ,நன்மை, தீமை எதுவும் இல்லை.
25 தெய்வம் உதவாது.
26 செல்வம் உண்டு,அமைதி இருக்காது.
27 மிகுந்த செல்வம் உண்டு.
28 தெய்வ அருள் நிச்சயம் உண்டு.
29 பால் பாக்கியம் ,செல்வம்.
30 இலட்சுமி கடாட்சம்.
31 நன்மை நிச்சயம் உண்டு.
32 கடவுள் அருள் உண்டு . வாழ்வில் ஏற்றத்தாழ்வு ஏற்படும்.
33 நன்மையுண்டு.
34 குடி பெருகும்.
35 இலட்சுமி கடாட்சம்.
36 மத்திம பலன்.
37 லாபம் உண்டு, இன்பம் உண்டு.
38 கண்டிப்பாக தவிர்க்கவும் ,கெட்ட சக்திகளின் உறைவிடம்.
39 சுகம், இன்பம்.
40 வெறுப்பு.
41 செல்வம் பெருகும், இன்பம் உண்டு.
42 இலட்சுமி குடியிருப்பாள்.
43 சிறப்பில்லை.
44 கண் போகும்.
45 சகல பாக்கியம் உண்டு.
46 குடி பெயரும்.
47 வறுமை.
48 நெருப்பு பாதிப்பு ஏற்படுத்தும்.
49 மூதேவி வாசம்.
50 பால் பாக்கியம்.
51 வியாஜ்யம்.
52 தான்யம் பெருகும்.
53 விரயம், செலவு.
54 லாபம்.
55 உறவினர் விரோதம்.
56 புத்திரகளால் பலன்.
57 மகப் பேறு இல்லை.
58 விரோதம்.
59 மத்திம பலன்கள்.
60 பொருள் விருத்தி.
61 பகை.
62 வறுமை.
63 குடி பெயரும்.
64 சகல சம்பத்தும் உண்டு.
65 பெண்கள் நாசம்.
66 பத்திர பாக்கியம்.
67 பயம்.
68 பொருள் லாபம்.
69 நெருப்பினால் நாசம்.
70 பிறருக்குப் பலன்.
71 யோகம்.
72 பாக்கியம்.
73 குதிரை கட்டி வாழ்வான்.
74 அபிவிருத்தி.
75 சுகம்.
76 புத்திரர் குறைவு.
77 யானை கட்டி வாழ்வான்.
78 பித்திரர் குறைவு.
79 கன்று காளை விருத்தி.
80 இலட்சுமி வாசம் செய்வாள்.
81 இடி விழும்.
82 தோஷம்.
83 மரண பயம்.
84 செளக்கியம்.
85 சீமானாக வாழ்வர்.
86 இம்சை உண்டு.
87 தண்டிகை உண்டு.
88 செளக்கியம்.
89 பலவீடு கட்டுவான்.
90 யோகம் உண்டு.
91 விஸ்வாசம் உண்டு.
92 ஐஸ்வரியம் சேரும்.
93 பல தேசங்கள் சென்று வாழ்வான்.
94 அந்நிய தேசத்தில் இருப்பான்.
95 தனவந்தன்.
96 பரதேசி.
97 கப்பல் வியாபாரம் செய்வான்.
98 பிரதேசங்கள் செல்லும் வாய்ப்பு.
99 இராஜ்யம் ஆள்வான்.
100 சேமத்துடன் வாழ்வான்.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்தும் பழமையான பாடல்களின் மூலம் எழுதப்பட்ட மனையடி சாஸ்திரத்தில் இருந்து எடுத்து எழுதப்பட்டதாகும்.

45 comments

 1. எனக்கு ஒரு ஐயம். அறையின் நிள அகல அளவுகள் என்பன அறையின் சுவரின் அளவையும் உள்ளடக்கியதா? இல்லையேல் சுவரை தவிர்த்த அறையின் உள் அளவுகளா?

  Like

   • மதிப்பிற்குரியவரே வணக்கம். நாங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு எடுத்துள்ளோம். மனையின் அளவு வடக்கிலும் தெற்கிலும் 38அடி கிழக்கிழும் மேற்கிலும் 16 அடி. மேற்கில் 12 அடி தெரு. ஒரு அடுப்படி வரவேற்பு அறை மற்றும் படுக்கையறையுடன் கூடிய வீட்டினை எவ்வாறு சிறப்புடன் எழுப்பலாம்?

    Like

   • மதிப்பிற்குரியவரே வணக்கம். நாங்கள் புதிதாக வீடு கட்ட முடிவு எடுத்துள்ளோம். மனையின் அளவு வடக்கிலும் தெற்கிலும் 38அடி கிழக்கிழும் மேற்கிலும் 16 அடி. மேற்கில் 12 அடி தெரு. ஒரு அடுப்படி வரவேற்பு அறை மற்றும் படுக்கையறையுடன் கூடிய வீட்டினை எவ்வாறு சிறப்புடன் எழுப்பலாம்?

    Like

   • வணக்கம். உங்கள் இல்லம் மேற்க்கு நோக்கி அமைவதாக கருதுகிறேன். உங்கள் வீட்டின் குடும்பத்தலைவர் அல்லது முதல் குழந்தையின் ஜாதகத்தை கணித்து முகப்பு நிலையை அமைத்துகொள்ளுங்கள். அக்னிமூலையில் (தென்கிழக்கு) சமையலறையையும், கன்னிமூலையில் (தென்மேற்க்கு) படுக்கையறையையும், பூஜையறை அமைக்க நேர்ந்தால் வடகிழக்கிலும் அமைத்து வாழ்வில் எல்ல வளமும் பெற்று வாழலாம்…

    Like

   • ஐயா தங்களின் பதில் பதிவிற்கு மிக்க நன்றிகள். எங்களின் வீட்டு மனை மேற்கினை நோக்கியதே. மனையின் அளவு 38 அடி நீளம் 16 அடி அகலம். பெரும்பான்மையான மனையடி நூல்களில் 38 அடி மனையைப் பற்றி சிறப்பாக குறிப்பிடவில்லை. ஆனால் எங்கள் மனையின் நீளம் 38 அடி ஆகும். 38 அடியில் நாங்கள் புதிய வீட்டினை எழுப்பலாமா? அல்லது எப்படி அமைக்கலாம்? வீடிற்கு ஏற்ற நிலை மற்றும் கதவின் அளவுகள் என்ன? தங்களின் நான் எவ்வாரு அனுகுவது?

    Like

 2. ஐயா..எனது வீட்டு மனை..19.5அடிஅகலமுள்ளது..17ஆக குறைக்கமுடியவில்லை..இதனால் வாஸ்து குறைபாடு வருமா?? சரியாக 20 அடி என்று தான் இருத்தல் வேண்டுமா??

  Like

 3. அய்யா வணக்கம் 100அடிக்கு மேல் 140அடி நீலம் இருந்தால் அதனுடைய பலன் 100அடிக்கு மேல் யாரும் பதிவு செய்யவிலையே பதில் தாருங்கள்.நன்றி

  Like

 4. ஐயா வணக்கம்.
  வாஸ்து சுவற்றின் உள் அளவை குறிக்குமா அல்லது வெளி அளவை குறிக்குமா நாம் எந்த அளவை பின்பற்ற வேண்டும்.

  Like

 5. ஐயா, உங்கள் கட்டுரை தவிர மற்ற அனைத்து கட்டுரைகள் 22 அடி நல்லது என்று காட்டுகிறது. தயவுசெய்து விளக்குங்கள்

  Like

  • ஐயா, உங்கள் கட்டுரை தவிர மற்ற அனைத்து கட்டுரைகள் 22 அடி நல்லது என்று காட்டுகிறது. தயவுசெய்து விளக்குங்கள்

   Like

 6. ஐயா வீட்டில் எத்தனை பில்லர்கள் இருக்க வேண்டும் ஓற்றை படையாகவா அல்லது இரட்டை படையாவா இரு க்க வேண்டும் மா எப்படி என்று சொல்லுங்க.

  Like

 7. ஐயா வணக்கம்…. மனையடி என்பது உள் அளவா இல்லை வெளி அளவா என்று கூறுங்கள்….

  Like

 8. கட்டிட வாஸ்து அளவு மாடி படி விடுத்து இருக்க வேண்டுமா

  Like

 9. ஐயா வணக்கம், எங்கள் இடம் மேற்கு பார்த்தது, மாடிப்படிக்கு கிழ் சமையல் கட்டு ௮மைக்கலாமா?

  Like

 10. வணக்கம் ஐய,நான் வாங்கிய இடம் கிழக்கு 16 அடி தென்வடக்கு 52 அடி
  16#52. 16#52 இப்படி செங்கல் வடி வில் இருக்கிறது. இடத்தின் இருபுறமும் ரோடு இக்கிறது. இந்த இடத்தில் ஒரு சிறிய வீடு கட்ட வேண்டும்.நல்ல ஒரு வரைபடம் தாருங்கள்.

  Like

 11. ஐயா..எனது வீட்டு மனை..24 அடி அகலமுள்ளது..60 அடிநீளமுள்ளது. இதனால் வாஸ்து குறைபாடு வருமா?? அகலம் சரியாக 20 அடி என்று தான் இருத்தல் வேண்டுமா??நீளம் எவ்வளவு இருத்தல் வேண்டும்.
  வடக்கு பார்த்த வீட்டு மனை. இரண்டு அறைகள் வேண்டும். அறைகளின் நீளம்-அகலம் எவ்வளவு இருத்தல் வேண்டும். அறைகளின் நீளம்-அகலம் அறைகளின் உள் பகுதியை குறிக்குமா? அல்லது வெளி பகுதியை குறிக்குமா?

  Like

 12. வணக்கம் .
  முகப்பில் கேட் அமைக்க அளவு கூறுங்கள்.
  வடக்கு பார்த்த வீடு. கீழ் மேல் அளவு 30 அடி.
  தற்சமயம் கீழிருந்து 14 அடி கேப் உள்ளது. (கேட் தூண் கழித்து )

  Like

 13. Sir good evening I need மனை அடி சாஸ்திர அளவுகள் for 150 feet. Can you help me for that

  Like

 14. அய்யா வணக்கம்…நான் ஓரு புது விடு பார்த்து உள்ளேன் நிலையடி( அருகால் )இருந்து அடுத்த நிலையடி வரை உள்கூடு 18 அடியும் சுவரின் முனையிலிருந்து அடுத்த சுவர் முனை வரை 19 அடி 2.5 அங்குலம் உள்ளது…எதை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும்…? விளக்கம் தாருங்கள் ….செல் 8148748008

  Like

 15. ஐயா எங்கள் வீட்டிண் அளவு 21×49
  தங்களின் கருத்து என்ன?

  Like

 16. ஐயா மேற்கு மனை அளவு அமைக்கவேண்டும் ரூம் அளவு ?
  மேற்கு தெ வ 37.5அடி
  கிழக்கு தெ வ 40.5அடி
  வடக்கு கி மே 50 அடி
  தெற்க்கு கி மே 50 அடி

  Like

 17. ஐயா
  வடக்கு பார்த்து வீடு அமைக்கவேண்டும் ரூம் அளவு ? 2 பெட்ரூம் 1ஹால் 1கிச்சன் 1டையினிங் பேபோர்டிகோ பாத்ரூம் (1000சதுரஅடியில்) வேண்டும்
  மேற்கு பார்த்த மனையின் அளவுகள்
  மேற்கு தெ வ 37.5அடி
  கிழக்கு தெ வ 40.5அடி
  வடக்கு கி மே 50 அடி
  தெற்க்கு கி மே 50 அடி

  Like

 18. ஐயா எனது வீடு 17/17அடி கட்்டி உள்்ளேன்் சரியா

  Like

 19. ,வீட்டின் உள்ளளவில் ஏணிப்படி அளவு சேருமா

  Like

 20. ஐயா வணக்கம் எங்கள் வீடு வடமேற்கு பகுதியில் கழிவு அறை உள்ளது ஆனால் தென் மேற்க்கை காட்டிலும் 5அடி தல்லி இருக்கிறது அதற்கு என்ன செய்யலாம்

  Like

 21. நான புதியதாக ஒரு வீட்டு மனை வாங்க உள்ளேன்
  மனை விவரம் வடக்கு – தெற்கு ( கிழக்கு பக்கம் 30அடி சாலை) 36அடி
  வடக்கு-தெற்கு (மேற்கு பக்கம்) – 28.6அடி
  கிழக்கு-மேற்கு – 60அடி மொத்தம் 1938 ச.அடி பரப்பளவு இதனை நான் வாங்கலாமா? அப்படி வாங்கினால், வீடு 22 x37அடி பரப்பளவில் கட்டலாமா? என் பெயர் பாபு, மனைவி: மஞ்சுளா, மகன்:

  Like

 22. நான புதியதாக ஒரு வீட்டு மனை வாங்க உள்ளேன்
  மனை விவரம் வடக்கு – தெற்கு ( கிழக்கு பக்கம் 30அடி சாலை) 36அடி
  வடக்கு-தெற்கு (மேற்கு பக்கம்) – 28.6அடி
  கிழக்கு-மேற்கு – 60அடி மொத்தம் 1938 ச.அடி பரப்பளவு இதனை நான் வாங்கலாமா? அப்படி வாங்கினால், வீடு 22 x37அடி பரப்பளவில் கட்டலாமா? என் பெயர் பாபு, மனைவி: மஞ்சுளா, மகன்:யஷ்வந்த்,மகள்: மதுமிதா யார் பெயருக்கு வளமாக வாழ்க்கை அமையும்.பதில் அனுப்பவும்.

  Like

 23. ஜயா எனது தொழிற்கூடம் 11 அடி அகலமும் 21 1/2 அடி நீளமும் உள்ளது இது எனக்கு மேன்மை தருமா அல்லது எதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா

  Like

 24. ஐயா, நான் எனது ஊரில் வீடு கட்டிக்கொண்டிருக்கிறேன் எனது வீடானது தெற்கு வடக்காக 33’ அடி யும்(வெளிப்புறமாக) கிழக்கு மேற்க்காக 34’-3’’ அடியாகவும் (வெளிப்புறமாக படிக்கட்டும் சேர்த்து) அமைத்துள்ளோம் வீட்டின் வாசல் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது, வீட்டின் உள்புறம் இரண்டு படுக்கை அறைகள் 11’x10’ எனவும் குளியலறை/கழிப்பறை இரண்டும் 4’x10’ எனவும் ஹால் 11’x16’ எனவும் பூஜையறை 6’x8’ சமையலறை 11’x11’ எனவும் அமைந்துள்ளது இது சரியான வாஸ்துப்படி அமைந்துள்ளதா தயவுகூர்ந்து எனக்கு தெளிவுபடுத்துங்கள் ஐயா.

  Like

 25. அய்யா நான் கட்டி முடியாது வீடு ஒன்றை வாங்கி இருக்கிறேன்.. வடக்கு நோக்கி 15×50 இடம் இதில் மூன்று அங்குளம் இடம் விட்டு 14.1/2 ×50 தளம் ஒட்டி வீடு.. இதில் வலது புறம் பின்புறம் செல்ல மூன்று அடிமை சந்து விட்டு இருக்கிறது. சரிதானா..

  Like

 26. ஜயா எனது வீட்டின் கிழமேல் அளவு 13.6 தென்வடல் அளவு 44 அடி உள்ளது வடக்கு பார்த்த வாசல் இதை எவ்வாறு வாஸ்து முறையில் அமைக்கலாம் தயவு செய்து ஆலோசனை தரவும்

  Like

 27. அய்யா எங்கள் வீடு அளவு சிறியதாக உள்ளது… புதிய வீடு கட்டும் போது.. சமயலறை 4 க்கு 8 என்ற அளவில் சிறியதாக அமைக்கலாமா…??

  Like

  • வணக்கம். உங்கள் அளவுகளை கவனித்தேன் 6 அடிக்கு கீழ் உள்ள அளவுகளுக்கு வாஸ்து நல்லதாகவே உள்ளது. எனவே நீங்கள் குறிப்பிட்ட அளவு சிறந்ததே!

   Like

 28. வணக்கம் ஐயா.
  22க்கு40 மொத்த அளவு.வடக்கு வாசல் கட்டிய வீடு 20க்கு 40 வாங்கலாமா?

  Like

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.