புஷ்ப சோதனை

0
275

இந்த சோதனை மூலம் மிகத் தெளீவாக பலன்களை அறிய முடிகிறது. இது பின்னாளில் நடப்பதை காட்டும் கண்ணாடி ஆகும். ஜாதகம் இல்லாதவர்களூம் இதன் மூலம் பலனை அறிய முடிவும்.

மனையின் நடுவில் நாற்சதுரமாக ஒரு முழமளவு ஆழம் கொண்ட குழியைத் தோண்டி அதில் நிரம்புமளவு தண்ணீர் விட்டு ஒரு மலரை எடுத்துக் கொண்டு சிவ பெருமானை மனதில் தியானம் செய்து அந்த தண்ணீரின் நடுவில் விட வேண்டும். அந்தப் பூவானது வலமாக சுற்றி வருமானால் நல்ல வாழ்வும், கீர்த்தியும், சம்பத்தும், ராஜபோகமும் அமையும். இடது புறமாக சுற்றி வந்தால் அங்கு எடுக்கப்படும் மனை அதிக துன்பங்களைக் கொடுக்கும். வராத ஆபத்துக்களூம் வரும்.

ஈசான்ய மூலை எனப்படும் வடகிழக்கில் அந்த மலரானது வந்து நின்றால் கனத்த ஐஸ்வரியமும், தீர்க்க ஆயுளூம், புத்திர பாக்கியமும், வாழ்வில் மென்மேலும் விருத்தி ஆகுதலும் நடக்கும். பெரியோர்களூக்கும் அந்தணர்களுக்கும் அன்னதானம் வழங்குபவனாக இருப்பான்.

இந்திரன் திசையான கிழக்கில் அந்த மலரானது வந்து நின்றால் இலட்சுமி வாசம் ஆகும். தனதான்ய சம்பத்து சந்தான பாக்கியமும் ஆரோக்கியம், தீர்க்க ஆயுளூம், சுகபோகமும், பசு கன்று விருத்தியும், ஆசார அனுஷ்டானங்களூம் உடையவனாக இடுப்பான்.

Advertisements

Leave a Reply