வியாபார ஸ்தலங்களில் வாஸ்து பலம்

0
821

திருச்சி, சென்னை, மதுரை, கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் ஒரு சில குறிப்பிட்ட தெருக்களில் மாத்திரம் ஜன நெருக்கடியும் அதிக வியாபாரமும் நடப்பதை நாம் காண்கின்றோம். அவ்விதம் அந்த குறிப்பிட்ட இடத்தில் மற்றும் வியாபாரம் நடப்பதன் காரணத்தை நாம் ஆராய்ந்து பார்த்தால் அந்த தெருக்கள் வாஸ்து பலத்துடன் சிறந்து விளங்குவதை காண முடிகின்றது. உதாரணமாக சென்னை தியாகராய நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் எந்த வியாபாரம் ஆனாலும் சிறப்புடன் நடப்பதையும், ஜன நெருக்கடி அதிகம் காணப்படுவதையும், பணப்புழக்கம் தாராளமாக இருப்பதையும் அங்கு சாதாரணமாக காய்கறி விற்கும் வியாபாரி கூட அதிக லாபம் பெறுவதையும் காண முடிகின்றது. ”வாஸ்து பலத்துடன்” சிறந்து விளங்குவதே இதற்கு காரணம் ஆகும்.

எனவே நாம் ஒர் வியாபாரத்திற்கு ஸ்தலம் தேர்ந்தெடுக்கும் முன் அது தெருவில் அமைந்துள்ள அமைப்பு, அந்தத் தெரு “வாஸ்து பலத்துடன்” இருக்கின்றதா என்பவைகளை பார்த்து அதன் பின்னர் வியாபார ஸ்தலத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மனிதனுக்கு வீடு சாஸ்திரப்படி எப்படி அமைய வேண்டும் என்பது முக்கியமோ அதே அளவு வீட்டிற்கு பொருளாதாரத்தை, நிலைநிறுத்தும் அந்த வீட்டினர் சம்பந்தப்பட்ட அத்தனை “வியாபார ஸ்தலங்களும், தொழிற் சாலைகளும், “வாஸ்து பலம்” பெற்றிருக்க வேண்டியது மிக முக்கியமாகும்.

கடை கிழக்கு முக வாயிலானால் கடையின் தளத்தை மேற்கிலிருந்து கிழக்கு பக்கமாக சாய்வாகவும், தெற்கிலிருந்து வடக்குப் பக்கமாக சாய்வாகவும் முதலில் அமைத்துக் கொள்ள வேண்டும். கடையின் அதிக எடையுள்ள பொருட்கள் மேற்குப்பக்கமும், தெற்கு பக்கமும் வைக்க வேண்டும். வியாபாரி ஆக்கினேயத்தில் கிழக்கு பக்க சுவற்றை தொடாமல் ( ஈசான்யம் ) பார்த்து வடக்கு பக்க சுவரை பார்த்து அமர வேண்டும் அவ்விதம் அமரும் போது பணப் பெட்டியை அல்லது பீரோவை அவருக்கு இடதுகைப் பக்கம் வைத்துக் கொண்டு வியாபாரம் செய்ய வேண்டும்.

தெற்கு முக வாயில் கடையானால் தென்மேற்கில் மேஜையை அமைத்து (கிழக்கு நோக்கி) வலது பக்கத்தில் கல்லப்பெட்டி பீரோ முதலியவற்றை வைத்து வியாபாரம் செய்ய வேண்டும் தெற்கு முக கடையில் வேறு எந்த திசையிலும் அமர்ந்து வியாபாரம் செய்தால் கண்டிப்பாக நஷ்டம் ஏற்படும். தென்மேற்கில் கிழக்கு நோக்கி (ஈசான்யம் பார்த்து) அமர்ந்து வியாபாரம் செய்வதே சிறப்பாகும்.
மேற்குமுக வாயில் கடையாக இருந்தால் மேற்கில் இருந்து கடையின் உள் பகுதிக்கு (கிழக்கு பக்கம்) தரையை சாய்வாக வருப்படி அமைத்துக் கொள்ள வேண்டும். அவ்விதம் மேஜையை வாயுலியம் பார்க்கும் போது 10° முதல் 15° வரை சாய்வாக ஈசான்யம் பார்க்கும்படி அமைத்துக் கொள்வது சிறப்புடையதாகும்.

வடக்குமுக வாயில் கடையாக அமைந்தால் வியாபாரத்திற்கு மிகவும் சிறந்தது. கடையின் உள் பக்கத்தில் (தெற்கு பக்கம்) இருந்து கடையின் முன் பக்கம் வரை (வடக்கு பக்கம் வரை) தரையை சரிவாக அமைத்துக் கொள்ள வேண்டும். வாயுவியத்தில் வடக்கு சுவரை தொடாமல் மேற்கு சுவரை ஒட்டி அமர்ந்து மேஜையை கிழக்கு நோக்கி இருக்கும்படி (ஈசான்ய திசையை பார்க்கும்படி) அமைத்துக் கொண்டு பணப் பெட்டி, பீரோ முதலியவற்றை வலது பக்கத்தில் வைத்துக் கொண்டு (நைருதி திசையில் கிழக்கு நோக்கி) வியாபாரம் செய்ய வேண்டும். அவ்விதம் அமரும் போது கடைக்குள் நாம் வருவதற்கு ஈசான்யத்தில் (வடகிழக்கில்) உள்ளே வரும்படி “ஷோகேஸ்” அமைத்துக் கொண்டு நாம் வியாபாரம் செய்தால் “லாபம்” நிச்சயம் உண்டு.

வாசல் எந்த திசையானாலும் வியாபார நிறுவனத்தின் தலைவர் அமர்வதற்கு தனியிடம் அமைக்க வேண்டும். என்றால் அதை தென்மேற்கில் (நைருதியில்) அமைத்து அதற்கு வடக்கு ஈசான்யம், கிழக்கு ஈசான்யம் ஏதாவது ஒர் திசையில் வழி வைத்து அதில் வடக்கு நோக்கியோ அல்லது கிழக்கு நோக்கியோ அமரும்படி செய்ய வேண்டும். அந்த இடத்திற்கு எக்காரணம் கொண்டு மற்ற திசைகளில் வழி இருக்கக் கூடாது.

Advertisements

Leave a Reply