கிணறு அல்லது போர்வெல்

0
359

ஒர் மனையில் அமைய வேண்டிய இடம்:

கிணறு அமைப்பது என்பதில் மனையடி சாஸ்திரத்திலும், வாஸ்து சாஸ்திரத்திலும் ஒரேவிதமான கருத்துகள் நிலவுகின்றன.

சக்தி சேமிப்பு (energy savings) என்ற விஞ்ஞான முறையில் மனையில் மொத்த இடத்திலும் வடகிழக்கு ஒன்றே சிறந்த இடமாகும். அவ்வாறு அமைக்கும் போது மொத்த இடத்தின் வடகிழக்கில் வெளி சுவற்றின் ஒரத்தில் அமைக்காமல் வடக்கு சார்ந்த வடகிழக்கிலோ, கிழக்கு சார்ந்த வடகிழக்கிலோ அமைப்பது சிறந்தது.

கட்டிடத்தின் தலைவாசல், தெருவாசல் முதலியவை கிணற்றிற்கு நேர் வராமலும் பார்த்துக் கொள்ளவேண்டும் எக்காரணத்தை கொண்டு வீட்டிற்குள் கிணறு வரக் கூடாது. தென்கிழக்கு, தென்புறம், வடமேற்கு, நடுப்பகுதி முதலியவற்றிலும், கண்டிப்பாக தென் மேற்குப் பகுதியிலும் கிணறு அமைக்கக் கூடாது.

எது எவ்விதம் இருப்பினும் வடகிழக்குப் பகுதி ஒன்றே கிணறு எடுக்க சிறந்த இடம் என்பது எனது அனுபவத்தில் கண்ட உண்மையாகும்.

பெண்களின் பிரசவ காலத்திலும், சுத்தமில்லாத நாட்களிலும் கிணறு எடுக்க கூடாது. வடகிழக்கில் அமைக்கப்படும் கிணற்றை உயரமாக கட்டக் கூடாது (வரப்புச்சுவர்).

Advertisements

Leave a Reply