நிலத்தை தோண்டி பலன் காணும் முறை

0
340

நிலத்தின் தன்மையையும், பலனையும் அறிய இந்த முறையை பயன்படுத்த வேண்டும். கட்டிடத்திற்கு கடைக்கால் தோண்டும் முன்பாக இந்த சோதனையை செய்து பார்க்க வேண்டும். நல்ல நாளும், முகூர்த்தமும் கூடிய சுபதினத்தில் சகுனங்கள் சரியாக இருக்கும் நேரத்தில் நிலத்தின் மையப் பகுதியில் சிறு குழி ஒன்றைத் தோண்ட வேண்டும். மண்ணுடன் சேர்ந்து கரி எழும்பி வந்தால் அந்த வீட்டில் இருக்கும் குடும்பத்தினர் அடிக்கடி நோய் வாய்ப்படுவார்.

உமி உடன் வந்தால் வெட்டிச் செலவு ஏற்படும். விறகு கட்டைத் துண்டு ஏற்பட்டால் சொந்த மனையை இழந்து துன்பங்கள் பல வந்து வெளியேற நேரிடும்.

மனித எலும்பும், மண்டையோடும் தென்பட்டால் அடிக்கடி சண்டைகளும் உண்டாகக்கூடும் .

தேள், கரையான் போன்றவை தென்பட்டால் மன நிம்மதி அகலும், கட்டெறும்புகள் தென்பட்டால் கட்டிடத்திற்கு ஆபத்து ஏற்படும். ஆமை, பூரான், பாம்பு, புழுக்கள் தென்பட்டால் கட்டிட வேலைகள் எளிதில் முடியாமல் எதிர்பாராத தடங்கல்கள் பல நேரிடும், நண்டு, சிலந்தி, அரணை, தவளை ஆகியவை தென்பட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

கந்தல் துணிகள் தென்பட்டால் வாழ்வு நிலையானதாக அமையும், செங்கல் தென்பட்டால் எதிர்காலம் சிறப்பாக அமையும். செம்பு நாணயங்கள் தென்பட்டால் வளமான வாழ்வு அமையும். தானிய மணிகள் தென்பட்டால் செழுமையான வாழ்க்கை அமையும். பஞ்சலோகம் பார்வையில் பட்டால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். நிம்மதியான மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கை அமையும்.

பொன், வெள்ளி, செம்பு, போனற உலோகங்கள் தென்படுவது நல்லது ஆகும்.

இரும்பு, ஈயம், பித்தளை போன்ற உலோகங்கள் தென்படுவது மத்திமம் ஆகும்.

கருங்கல், எலும்பு இவை தென்பட்டால் நில உரிமைதாரர் ஆணாக இருந்தால் மரணம் தரும். பெண்ணாக இருந்தால் கணாவனுக்கு மரணம் ஆகும்.

பசுமாட்டுக் கொம்பு தென்பட்டால் நல்ல செல்வ வளம் உண்டாகும். இவ்வாறு குழி தோண்டி பரிசோதனை செய்யாமல் வீடு கட்டினால் கீழ்கண்ட பலனைத் தரக் கூடும்.

வீட்டில் வளர்ந்து வரும் பசு பாலில்லாமல் போனால் அந்த மனையின் கீழ் குழந்தையின் எலும்பு இருக்கும்.

பசு இருந்து பால் இல்லாமல் அரசு அல்லது மேலோர் கோபத்துக்கு ஆளானால் மனையில் கீழ் அக்கினி மூலையில் குதிரை எலும்பு இருக்கும். ஆனாலும் யோகத்திற்கு குறைவு இருக்காது. எந்த நாளும் நோய், துன்பம் இருந்து வருத்தம் தருமானால் மனையின் தென்பக்கம் யானை எலும்பு இருக்கும். எந்த நாளும் அவமானம், தோஷம் இருந்தால் மனையின் நிரூதி மூலையில் பன்றி எலும்பு இருக்கும். காளை மாட்டின் எலும்பு மனையின் மேற்குப் பகுதியில் இருந்தால் வீட்டின் உரிமையாளர் ஆருடஞ் சொல்வார். மனையின் கீழ் கழுதை எலும்பு இருந்தால் என்றைக்கும் வீடு நாசம் அடையும். அண்டை அயலார் என்றைக்கும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் மனையின் வடக்கு பகுதியில் ஆட்டு எலும்பு இருக்கும். ஈசானிய மூலையில் நாய் எலும்பு இருந்தால் வீட்டில் எந்நாளூம் கலகம் இருக்கும். வீட்டு மனையில் தலை மண்டை ஓடு இருந்தால் அந்த மனையை ஆறு சாண் அளவு மண் எடுத்து சோதனை செய்ய வேண்டும். கோவில்கள் கட்ட வேண்டுமானால் அதன் பரப்பளாவு முழுவதும் ஏழு சாண் அளாவு மண் எடுத்து சோதனை செய்ய வேண்டும். வைசியனாக இருந்தால் நான்கு சாண் அளவு மண் எடுத்து சோதனை செய்ய வேண்டும். சூத்திரனாக இருந்தால் 3 சாண் அளவு மண் எடுத்து சோதனை செய்ய வேண்டும்.

Advertisements

Leave a Reply