மனைப் பொருத்தம் காணும் முறை – 1

மனைப் பொருத்தம் காண்பது என்பது மிகச்சிறந்த சற்று கடினமான ஆனால் அவசியமான கணித முறை ஆகும். இதற்கென பதினொரு விதமான பொருத்தத்தை நாம் பார்க்க வேண்டும்.

1. கெற்பப் பொருத்தம் :

மனையின் அளவை மனைக்கு உரியவரின் கையால் நான்கு சாண் அளவு கொண்ட கோலினால் (சுமார் 36 அங்குலம்) அளந்து அகல நீளத்தைப் பெருக்கிய தொகை துருவபதம் எனப்படும். அதை குழி என்றும் கூறுவர். துருவபதம் எனும் குழியை எட்டால் வகுக்க மிஞ்சி நிற்கும் மீதியே கெற்பப் பொருத்த எண் ஆகும். வகுத்துப் பார்க்க மீதி இல்லாமல் 0 வந்தால் எட்டாம் எண்ணையே மீதமாகக் கொண்டு பலன் காண வேண்டும்.

மீதி
1 என்றால் கருட கெற்பம் – உத்தமம்
2 என்றால் புறா கெற்பம் – மத்திமம்
3 என்றால் சிம்ம கெற்பம் – உத்தமம்
4 என்றால் நாய் கெற்பம் – அதமம்
5 என்றால் சர்ப்ப கெற்பம் – அதமம்
6 என்றால் காக்கை கெற்பம் – அதமம்
7 என்றால் யானை கெற்பம் – உத்தமம்
8 என்றால் கழுதை கெற்பம் – அதமம்

இந்த அட்டவணையைப் பயன்படுத்தி கெற்பப் பொருத்தம் காணலாம்.
2 வது பொருத்தம் ஆதாய பொருத்தம் அடுத்த பதிப்பு….

Advertisements

5 comments

 1. அன்பார்ந்த நிபுணரே. ஒரு குழி அளவு என்பதை தெளிவுபடுத்தவும். சிலர் 3×3 = 9 சதுரடி என்கிறார்கள். சிலர் 144 சதுர அடி என்கின்றனர். 36 அங்குலம் 3 அடியே. ஆக 9 சதுர அடி என கொள்ளளாமாங்க

 2. அன்பார்ந்த நிபுணரே. ஒரு குழி என்பது 3×3 அடியா என தெளிவுபடுத்தவும். கழுதை கெற்பத்திற்கு உரிய பலனையும் சொல்லுங்கள். என்னுடைய இல்லம் 55×60 அடி. குழி 9 சதுரடி என கொண்டால் 360 குழி

  • குழி கணக்கு சாஸ்திரம் :- கட்டிடத்தின் வெளி பக்க அளவுகளை கணக்கிட்டு குழி கணக்காக மாற்றி 11 பொருத்தங்களில் எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அதில் அதிக நன்மைகள் தரக்கூடிய பொருத்தங்கள் வரும்படியாக கட்டிடம் கட்ட வேண்டும். முக்கியமாக கட்டிடத்திற்கு அதிகமான வயது வரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

   குழி என்பது 3 அடி அகலம் 3 அடி நீளம் கொண்ட 9 சதுரஅடிக் கொண்டது ஒரு குழி எனப்படும்.

   உதாரணம் :- இடத்தின் அகலம் 27 அடி, நீளம் 39 அடி என்றால்

   27 X 39 வருவதை 9 ஆல் வகுக்க வரும் மீதம்.
   = 117 குழிகள்
   பொருத்தங்களை பதிப்பில் பார்க்கவும்… நன்றி.

 3. ஐயா எங்களது மனை வெளி அளவு 22*26 அடிகள் இது சரியான அளவா இதற்கு ஆயாதி பொருத்தம் எவ்வாறு உள்ளது

Leave a Reply