கட்டிடம் கட்ட ( பூஜைக்கு ) ஏற்ற மாதங்கள்

1
433

மனை கோலுவதற்க்கு ஏற்ற மாதங்கள்

கட்டடம் கட்டத் தொடங்கும்போது மனைகோலப்படுகிறது. அதை நன்மை தரும் மாதங்களில் செய்ய வேண்டும். அப்போது தான் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்களுக்கு நற்பலன்களாக நடைபெறும்.

மனைகோலும்வதற்கு ஏற்ற மாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி

மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்களிலும் மனை கோலலாம். மற்ற நான்கு மாதங்களான ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவற்றில் மனை கோலக்கூடாது.
இவற்றில் ஒவ்வொரு ஜன்ம நட்சத்திரத்திற்கும் ஆகாத சூன்ய மாதங்கள் உள்ளன. எத்தகையை மாதங்களிலும் மனைகோலக்கூடாது. வீடு கட்டுபவர் தம்முடைய ஜன்ம நட்சத்திரம் அல்லது ராசிக்கு ஆகாத சூன்ய மாதத்தைத் தெரிந்து கொண்டு அந்த மாதத்தில் மனை கோலுவதைத் தவிர்க்க வேண்டும்.

கீழே ஒவ்வொரு ஜன்ம நட்சத்திரம் அல்லது ராசிக்கு எந்தெந்த மாதம் சூன்ய மாதமாக விளங்குகிறது என்பது விளக்கமாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

நட்சத்திரம் – ராசி – சூன்யமாடம்
அசுவினி – மேஷம் – சித்திரை
பரணி – மேஷம் – சித்திரை
கிருத்திகை முதல் பாதம் – மேஷம் – சித்திரை
கிருத்திகை 2, 3, 4, பாதங்கள் – ரிஷபம் – வைகாசி
ரோகிணி – ரிஷபம் – வைகாசி
மிருகசீரிடம் 1, 2 பாதங்கள் – ரிஷபம் – வைகாசி
மிருகசீரிடம் 3, 4 பாதங்கள் – மிதுனம் – ஆனி
திருவாதிரை – மிதுனம் – ஆனி
புனர்பூசம் 1, 2, 3, பாதங்கள் – மிதுனம் – ஆனி
புனர்பூசம் 4 ஆம் பாதம் -கடகம் – ஆடி
பூசம் – கடகம் – ஆடி
ஆயில்யம் – கடகம் – ஆடி
மகம் – சிம்மம் – ஆவணி
பூரம் – சிம்மம் – ஆவணி
உத்திரம் முதல் பாதம் – சிம்மம் – ஆவணி
உத்திரம் 2, 3, 4, பாதங்கள் – கன்னி – புரட்டாசி
அஸ்தம் – கன்னி – புரட்டாசி
சித்திரை 1, 2 பாதங்கள் – கன்னி – புரட்டாசி
சித்திரை 3, 4, பாதங்கள் – துலாம் – ஐப்பசி
சுவாதி – துலாம் – ஐப்பசி
விசாகம் 4 ம் பாதம் – விருச்சிகம் – கார்த்திகை
அனுஷம் – விருச்சிகம் – கார்த்திகை
கேட்டை – தனுசு – கார்த்திகை
மூலம் – தனுசு – மார்கழி
பூராடம் – தனுசு – மார்கழி
உத்திராடம் முதல் பாதம் – மகரம் – மார்கழி
உத்திராடம் 2, 3, 4, பாதங்கள் – மகரம் – தை
திருவோணம் – மகரம் – தை
அவிட்டம் 1, 2, பாதங்கள் – கும்பம் – தை
சதயம் – கும்பம் – மாசி
பூரட்டாதி 1, 2, 3, பாதங்கள் – கும்பம் – மாசி
பூரட்டாதி 4 ம் பாதம் – மீனம் – பங்குனி
உத்திரட்டாதி – மீனம் – பங்குனி
ரேவதி – மீனம் – பங்குனி

ஒருவர் தன்னுடைய நட்சத்திரம் அல்லது ராசிக்கு எந்த மாதம் சூன்ய மாதமாக இருக்கிறதோ அதில் மனை அல்லது வீடு வாங்கக்கூடாது. கட்டட வேலையை ஆரம்பிக்கக்கூடாது. கிரகப்பிரவசமும் செய்யக்கூடாது.

உதாரணத்திற்குக் கும்ப ராசியை எடுத்துக் கொள்வோம். அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் ஆகிய நட்சத்திரங்கள் அந்த ராசியைச் சேர்ந்தவையாகும்.

அந்த ராசிக்கு சூன்ய மாதமாக விளங்குவது மாசி மாதமாகும். அதாவது அந்த மூன்று நட்சத்திரக்காரர்களுக்குமே மாசிதான் சூன்ய மாதமாகும். அதில் அவர்கள் வீடு அல்லது மனை வாங்குதல், கட்டட வேலையை ஆரம்பித்தல், கிரகப்பிரவேசம் செய்தல் ஆகியவற்றைச் செய்யக்கூடாது.

Advertisements

1 COMMENT

Leave a Reply