பூமி பூஜை – கொட்டகை – காவலர் தங்குமிடம்

0
225
A worker carries a bag of cement for construction of a hospital in Gaza City in early October. This project, funded by Qatar, brought in cement from Egypt, with the excess given to the Hamas government. Since the end of this summer's war, the Qatari projects have been relying on the local black market for cement.

மனையைத் தேர்ந்ததெடுத்தபின் அம்மனையில் வீடு கட்டத்திட்டமிடுகிறோம். தேர்ந்த கட்டடக் கலைஞர்களைக் கொண்டோ, கட்டடப் பொறியாளர்களைக் கொண்டோ வரைபடம் தயாரிக்கிறோம். அப்படத்திற்கு ஆட்சி ஒப்புதல் பெறுகிறோம். கட்டடம் கட்டத் தேவையான நிதி வசதிகளைத் திரட்டுகிறோம்.

இவ்வாறு ஆயத்தமானவுடன், நல்ல நாளும், நல்ல ஒரையும் குறித்து (சோதிடப் படியோ, வாஸ்து விழித் தெழு நாளிலோ ) கட்டட வேலை துவங்குவதற்கான முதற்படியாக பூமி பூசை செய்ய வேண்டும்.

பூமி பூசை செய்வதற்கு முன் செய்ய வேண்டுவன யாவை?

1. மனையைத் தூய்மையாக்க வேண்டும். கற்கள், புற்பூண்டுகள், செடி, கொடிகள் குப்பைகள் ஆகியன அப்புறப்படுத்தப்படல் வேண்டும்.
2. மனையின் எல்லைகளை நிர்ணயித்து தரையில் நான்கு எல்லைக் கோடுகளையும் வரைய வேண்டும்.
3. குழிகளை நிரப்பு, மேடுகளை வெட்டி மனை முழுவதும் சமமட்டமாகவோ, சாத்திரத்திற்கு ஏற்ற வகையில் சரிவாகவோ இருக்குமாறு கொட்டிச் சமப்படுத்த வேண்டும்.
4. கிழக்கு அல்லது வடகிழக்கு மூலைப்பகுதியைத் தூய்மை செய்து பூசைப் பொருட்களை வைக்க வேண்டும்.
5. சுற்றுமும் நட்பும் சூழ்ந்து இருக்க வாஸ்து பூஜை செய்து கட்டட வேலையைத் துவங்க வேண்டும்.
6. பூமி பூசை செய்த பின்னர், கிணறு வெட்டும் வேலையைத் துவங்கி விரைந்து முடிக்க வேண்டும். ஆழ்குழாய்க் கிணறு தோண்ட விருப்புவோர் பூமி பூசை செய்தவுடனேயே, துளை போடும் வேலை துவங்குதல் சிறந்தது.

கொட்டகை : சிமெண்ட் முதலான பொருட்களும், பிற உபகரணங்கள் வைப்பதற்காக ஒரு கொட்டகை தென்மேற்கு மூலையில் விடப்படும் திறந்த வெளியில் சுற்றுச் சுவரை ஒட்டியே போடலாம். ஆனால் இதை தென்கிழக்கு மூலைப் பகுதியில் போட்டால் சுற்றுச் சுவரிலிருந்து 3 அடி இடைவெளி விட்டுப் போட வேண்டும்.
தென்மேற்கு மூலையில் சிறு வீடு கட்டத் திட்டமிட்டிருப்பின், தற்காலிகக் கொட்டகைக்குப் பதிலாகச் சிறுவீட்டையே கட்டிவிடலாம்.

காவலர் தங்குமிடம் : தென்கிழக்கு மூலையில் ஒரு சிறு கொட்டகை போடலாம். தென் மேற்கு மூலையில் உள்ள கொட்டகையில் காவலரை தங்கச் செய்தல் ஊசிதமன்று என்று சாத்திரம் எச்சரித்துள்ளது.

Advertisements

Leave a Reply