கட்டடங்களின் வயது

ஜன்ம லக்கனத்திற்கு நான்கு அல்லது பத்தாவது ஸ்தானததில் சந்திரன் நிற்க, குரு, செவ்வாய், சனி ஆகியோர் பதினோராவது ஸ்தானத்தில் நிற்க மனை முகூர்த்தம் செய்தால் அங்கு கட்டடப்படும் கட்டடமானது நூறு ஆண்டுகள் வரை அழிந்து போகாமல் நிலைத்து நிற்கும்.

லக்கனத்தில் குருவும் சுக்கிரனும் இருக்க ஐந்து அல்லது மூன்றில் சூரியன் இருக்க ஆறில் செவ்வாய் இருக்க மனைமுகூர்த்தம் செய்தால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் நூறாண்டுகள் வரை சிறப்பாக வாழ்வார்கள்.

லக்கினத்தில் அல்லது பத்தில் சுக்கிரன் இருக்க மூன்றில் புதன் இருக்க, மனை முகூர்த்தம் செய்தால் அங்கு கட்டப்படும் கட்டிடம் பலகாலம் வரை அழிந்து போகாதிருக்கும்.

லக்கினத்தில் சுக்கிரன் இருக்க குரு கேந்திரத்தில் இருக்க மனை முகூர்த்தம் செய்தால் அங்கு கட்டப்படும். வீட்டிற்குத் தீயால் அபத்து உண்டாகாது. பூராடவும், திருவோணம், ரோகினி, உத்திரம், உத்திராட்டாதி, ஆயில்யம், மிருகசீரிடம் ஆகியவற்றில் குரு இருக்க வியாழக்கிழமை மனை முகூர்த்தம் செய்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

குருவும் புதனும் பதினோராம் இடத்தில் இருக்க சுக்கிரன் கேந்திரத் திரிகோணத்தில் இருக்க மனை முகூர்த்தம் செய்தால் அந்த மனை நெடுங்காலத்திற்குச் சிறப்பு பெற்றிருக்கும்.

Advertisements

Leave a Reply