கழிவுநீர் தொட்டி அமைக்கும் முறை – 2

0
346

வாஸ்து சாஸ்திரத்தின் படி, கழிவுநீர்த் தொட்டி (Septic Tank) அமைப்பது எப்படி என்று பார்ப்போம். நாம் அன்றாடம் நமது உடலில் இருந்து வெளியேற்றும் கழிவுகள், கழிவறையில் இருந்து குழாய் மூலமாகவோ, கால்வாய் மூலமாகவோ, தனியாக அமைக்கப்பட்ட ஒரு தொட்டியில் வந்து சேரும். அப்படிப்பட்ட கழிவுகளைத் தேக்கும் தொட்டியே கழிவுநீர்த் தொட்டி ஆகும்.

கழிவுநீர்த் தொட்டி (Septic Tank) அமைக்கும் முறை:-

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, அந்த இடத்தின் வடமேற்கு – வடக்குப் பகுதியில் தான் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர் தொட்டியை அந்த இடத்தின் தாய்ச் சுவரையும் மதில் சுவரையும் தொடாமல் அமைக்க வேண்டும்.

* ஒரு இடத்தின் வடமேற்கு – வடக்குப் பகுதியில் அமைக்கும் கழிவுநீர்த் தொட்டியை, வடக்கு மதில் சுவருக்கு வெளியே, மதில் சுவரைத் தொடாமலும் அமைக்கலாம்.

* ஒரு இடத்தில் அமைக்கும் கழிவுநீர் தொட்டியை, அந்த இடத்தின் தென்கிழக்கு, தென்மேற்கு மற்றும் வடகிழக்குப் பகுதியில் கண்டிப்பாக அமைக்கக் கூடாது.

* கழிவறையில் இருந்து கழிவு நீர்க் குழாய் மூலம், கழிவுநீர்த் தொட்டிக்கு வரும் கழிவுகளில் அடைப்பு ஏற்பட்டால் பழுது பார்க்க அமைக்கப்படும் சிறிய தொட்டியை (Chamber), தெற்கு மற்றும் மேற்குப் பகுதியில் அமைக்கக் கூடாது.

Advertisements

Leave a Reply