guru peyarchi

குருப் பெயர்ச்சி பலன்கள் – 2020


ஒவ்வொரு கிரகத்திற்கும் ஆறுவிதமான பலம் (ஷட்பலம்) சொல்லப்பட்டிருக்கிறது. இதில் முக்கியமானது நைசர்க்கிய பலம். அதாவது, இயற்கை பலம் அல்லது இயற்கைத் தன்மை என்பதாகும். அந்த அடிப்படையில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் (வளர்பிறை) பகவான்கள் இயற்கை சுபர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். இந்த இயற்கை சுபர்களில் குருபகவானை முழுச்
சுபர் என்று அழைக்கிறார்கள்.

பொதுவாக, கிரகங்கள் தாங்கள் ஏற்றுக்கொண்ட தன்மைகளின் படியும் அவர்கள் இருக்கும் இடத்திற்குத் தகுந்தபடியும் பலன்களைக் கொடுப்பார்கள். குருபகவான் சுப ஆதிபத்தியம் பெற்ற நல்ல இடங்களில் அமர்ந்திருந்தால் சிறப்பான பலன்களையும்; லக்னத்திற்கு சுப ஆதிபத்தியம் பெறாவிட்டாலும் ஸ்தான அடிப்படையில் நல்ல இடங்களில் அமர்ந்திருந்தால் நற்பலன்களையும் ஸ்தான அடிப்படையிலும் நல்ல இடத்தில் அமராமல் இருந்தாலும் சுபாவத்தில் முழுச்சுபராக இருப்பதால் கஷ்டங்களைக் குறைத்து வழங்குவார் என்று கூறவேண்டும்.

இந்த குருபெயர்ச்சி காலத்தில் மேஷ லக்னத்திற்கு அதிபதியான செவ்வாய்பகவான் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். குருபகவானும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டையும்; தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டையும்; சுக ஸ்தானமான நான்காம் வீட்டையும் அந்த வீட்டில் அமர்ந்திருக்கும் ராகுபகவானையும் பார்வை செய்கிறார். அதோடு இந்த குருபெயர்ச்சி குருபகவானுக்கு உகந்த வியாழக்கிழமையன்றும் அவருக்குரிய விசாக நட்சத்திரத்திலும் நடக்கிறது. மேலும் குருபகவான் சுயசாரத்தில் சஞ்சரிப்பதும் மேன்மையாகும். குருபகவான் தான் பகை பெறும் ராசியான துலாம் ராசியிலிருந்து தன் நட்பு வீடான விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.

இந்தப் பெயர்ச்சி காலத்தில் நாட்டில் சுபிட்சம் ஏற்படும். பொருளாதாரத்தில் அபிவிருத்தி அடைந்து காணப்படும். செவ்வாய்பகவானின் காரகத்துவங்களான உணவு, நெருப்பு, ராணுவம், காவல்துறை, ரியல் எஸ்டேட், விவசாயம், வெளிநாட்டு வர்த்தகம் போன்ற துறைகள் வளர்ச்சி அடையும். அந்நிய செலாவணி கையிருப்பு கணிசமாக உயரும்.

குரு பலம் என்றால் என்ன?

குருபகவான் ராசியிலிருந்து 2,5,7,9,11- ஆம் வீடுகளில் சஞ்சரிக்கும் காலத்தில் குருபலம் உண்டாகிறது என்று கூறுகிறோம். பொதுவாக, குருபகவான் பலம் பெற்று கேந்திர திரிகோண ராசிகளில் அமர்ந்தால் மூன்று லட்சம் தோஷங்களைப் போக்குவார் என்று நம்பப் படுகிறது. பகவத் கீதையில் “புரோகிதர்களில் நான் குருபகவான்’ என்று கிருஷ்ண பரமாத்மா கூறுகிறார்.

இந்த விருச்சிக ராசி சஞ்சாரத்தினால் துலாம், கடகம், ரிஷபம், மீனம், மகரம் ராசிகள் சிறப்பான நற்பலன்களைப் பெறப்போகின்றன. குருபகவான் 5,7,9, -ஆம் பார்வைகளில் மீனம், ரிஷபம், கடக ராசிகளைப் பார்வை செய்கிறார். பொதுவாக, குருபகவான் சரம், ஸ்திரம், உபயம் ஆகிய மூன்று ராசிகளையும் பார்வை செய்வார். அதனால் அவரை முழுச்சுபர் என்று கூறுவது சாலச்சிறந்தது அல்லவா?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.