பழனி முருகன் கோவில்

0
181

பழனி நகர் சங்க காலப் பெருமையுடைய மிகப் பழமையான நகரம் ஆகும். சங்க இலக்கியங்கள் பழனி மலையை பொதினி என்றே குறிப்பிடுகின்றன. பொதினி என்ற பெயர்தான் பழனி என்று மருவிற்று என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். சங்க இலக்கியங்களில் ஒன்றான திருமுருகாற்றுப்படை பழனி தலத்தில் அமைந்துள்ள ஆவினன்குடியை மூன்றாம் படை வீடாகக் குறிப்பிடுகின்றது.

பழனி திருத்தலம் முற்காலத்தில் கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கி வந்துள்ளது. பழனி பகுதியைக் கல்வெட்டுக்கள் வையாபுரி நாடு என்றே குறிப்பிடுகின்றன. இவ்வையாபுரி நாட்டை வையாபுரிக்கோப்பெரும் பேகன் என்ற மன்னன் ஆண்டு வந்துள்ளான்.

முற்காலத்தில் சித்தர்கள் பலர் வையாபுரி நாட்டில் வாழ்ந்துள்ளனர். பழனித் தலத்தின் பெருமை தொன்மையும், பெருமையும் வாய்க்கப் பெற்றது பழனித் தலமாகும். பழனித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகழிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழனி மாமலை மீதினிலேயுறை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழனி என்கிறார். காசியின் மீறிய பழனாபுரி என்று காசியை விட சிறந்த தலம் பழனி என்றும் அதிசயம் அனேகமுற்ற பழனி மலை என்றும் அருண்கிரி நாதர் பழனித் தலத்தின் சிறப்பை பற்றித் திருப்புகழில் எடுத்துரைத்துள்ளார்.

புண்ணிய ஸ்தலமான பழனிக்கு நான் முதலிலேயே வந்து வழிபடவில்லையே என அருணகிரி நாதர் உனது பழனிமலையெனும் ஊரைச் சேவித் தறியேனே என்று மனம் உருகிப் பாடுகின்றார். தொன்மையும், பெருமையும் வாய்க்கப் பெற்றது பழனித் தலமாகும். பழனித்தலத்தின் பெருமையினை அருணகிரி நாதர் திருப்புகழிலும், கந்தர் அலங்காரத்திலும் குறிப்பிட்டுள்ளார். பதினாலுலகோர் புகழ் பழனி மாமலை மீதினிலேயுறை பெருமாளே என்று பதினாலுலகும் போற்றும் தலம் பழனி என்கிறார்.

காசியின் மீறிய பழனாபுரி என்று காசியை விட சிறந்த தலம் பழனி என்றும் அதிசயம் அனேகமுற்ற பழனி மலை என்றும் அருண்கிரி நாதர் பழனித் தலத்தின் சிறப்பை பற்றித் திருப்புகழில் எடுத்துரைத்துள்ளார். புண்ணிய ஸ்தலமான பழனிக்கு நான் முதலிலேயே வந்து வழிபடவில்லையே என அருணகிரி நாதர் உனது பழனிமலையெனும் ஊரைச் சேவித் தறியேனே என்று மனம் உருகிப் பாடுகின்றார்.

மலைக் கோயில் பற்றி… முருகப் பெருமானின் ஆறு படை வீடுகளில் மூன்றாம் படை வீடான பொதினி எனும் பழனி குன்றின் மீது அமைந்துள்ளது. பழனி மலை கோயில் கடல் மட்டத்திலிருந்து 1500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த குன்றின்மீது அமைந்துள்ள முருக கடவுளின் திரு உருவம் ஒன்பது வகையான நவபாஸாணங்களைக் கொண்டு போகர் எனும் சித்தரால் நிறுவப்பட்டதாகும். பழனி முருகன் மனிதர்களாக பிறந்த அனைவருமே அடைய முயற்சிக்க வேண்டிய ஒரு மேன்மையான நிலை ஞானம் ஆகும்.

தவ வாழ்க்கை மேற்கொள்பவர்களுக்கும், ஆன்மீக தேடலில் இருப்பவர்களுக்கும் சுலபத்தில் வந்துதவுவார் ஆன்மீக அப்படி அந்த முருகபெருமான் ஞானத்தின் வடிவாக கோவில் கொண்டிருக்கும் புனித தலம் தான் “பழனி மலை ஸ்ரீ தண்டாயுதபாணி திருக்கோவில்”.

இக்கோவிலைப் பற்றிய மேலும் பல சுவாரஸ்யமான விடயங்களை இங்கு அறிந்து கொள்ளலாம். பழனி மலை முருகன் கோவில் தல வரலாறு மிகவும் பழமையான கோவில் இந்த பழனி மலை பாலதண்டாயுதபாணி கோவில். இக்கோவில் முருகனின் “ஆறு படை” வீடுகளில் “மூன்றாம் முருகனின் வீடாகும். புராண காலங்களில் இந்த ஊர் “திருஆவினன்குடி” என்றும் “தென்பொதிகை” என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது. இந்த கோவிலின் இறைவனான முருகப்பெருமான் “தண்டாயுதபாணி” மற்றும் “குழந்தை வேலாயுதர்” என அழைக்கப்படுகிறார்.

இக்கோவிலின் சிறப்பான அம்சமே பக்தர்களுக்கு நன்மைகளை செய்யும் சக்தி கொண்ட சித்தர்களின் “ரசவாத கலையை” பயன்படுத்தி, “நவபாஷாணத்தில்” செய்யபட்ட முருகனின் சிலையை போகர் சித்தர் ஸ்தாபித்தது தான். புராணங்களின் படி “ஞானப்பழத்தை” சிவன், பார்வதியிடமிருந்து தனது மூத்த சகோதரன் விநாயகன் பெற்றுக்கொண்டதால் கோபித்து கொண்டு இந்த மலையில் வந்து தங்கி விட்டார் முருகப்பெருமான். தந்தை சிவபெருமானும் தாய் பார்வதியும் எவ்வளவோ கெஞ்சி சமாதானப்படுத்தியும், இந்த பழனி மலையிலேயே தங்க போவதாக உறுதியாக கூறிவிட்டார் முருகன்.

பிற்காலத்தில் இத்தலத்திற்கு வந்து வழிபட்ட தமிழ் மூதாட்டி அவ்வையாருக்கு முருகன் காட்சி தந்த போது “நீயே ஞானவடிவானவன்” என்ற பொருள் கொண்ட “பழம் நீ” என்று அவ்வை போற்றினார். இதுவே காலப்போக்கில் இத்தலத்திற்கு “பழனி” என்ற பெயர் வர காரணமாயிற்று. தமிழ் சித்தர்களில் முதன்மையானவர்களில் “போகர்” சித்தரும் ஒருவர்.

அஷ்டமா சித்திகளையும் கைவரப்பெற்றவராவார். இந்த பழனி மலைக்கு போகர் தவமியற்ற வந்த போது, அன்னை பார்வதி, முருகன் மற்றும் சித்தர்களில் தலையாய சித்தரான “அகத்தியர்” ஆகிய மூவரின் உத்தரவு பெயரில் பழனி மலை முருகனுக்கு “நவபாஷாண சிலை” வடிக்கும் பணியை மேற்கொண்டார் போக சித்தர். இந்த நவபாஷாண சிலையை வடிப்பதற்கு போகர் எடுத்துக்கொண்ட காலம் ஒன்பது ஆண்டுகளாகும். “4000” திற்கும் மேற்பட்ட மூலிகைகளை கலந்து இந்த நவபாஷாண சிலையை செய்ய பயன்படுத்தப்பட்டது. 81 சித்தர்கள் போகரின் வழிகாட்டுதலின் படி நவபாஷாண சிலை செய்யும் பணியில் உதவினர். மிக அற்புதமான இந்த நவபாஷாண சிலையை மக்களின் நன்மைக்காக இறைவனின் உத்தரவின் பேரில் செய்தார் போகமுனிவர்.

இந்த நவபாஷாண சிலைக்கு அபிஷேகம் செய்ய பயன்படும் சந்தனம், விபூதி, பன்னீர், பஞ்சாமிர்தம் போன்றவற்றை பிரசாதமாக பெற்று சாப்பிடும் பக்தர்களின் எப்படிப்பட்ட உடல் நோய்களையும் தீர்க்கும் தெய்வீக சக்தி கொண்டது. இந்த பழனி மலையிலேயே போகர் சித்தரின் சமாதி மற்றும் போகர் சித்தரின் தனி சந்நிதி இருக்கிறது. இங்கிருக்கும் முருகன் விக்கிரகத்தில் ஒரு கிளியின் உருவம் இருக்கிறது. “திருப்புகழ்” எனும் முருகனை போற்றி பாடல் தொகுப்பை இயற்றிய அருணகிரிநாதர் தான் கிளி வடிவில் முருகனுடன் இருக்கும் பேறு பெற்றிருக்கிறார் என்பது ஐதீகம்.

பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுதுகிறது. முற்காலத்தில் வாழ்ந்த “இடும்பன்” எனும் அரக்கன் தனது தோளில் ஒரு கட்டையில் “சக்திகிரி,சிவகிரி” என்ற மலைகளை தூக்கி சென்று கொண்டிருந்தான்.

அப்போது இந்த பழனி மலையில் தான் தூக்கி வந்த இருமலைகளையும் வைத்து களைப்பாறும் போது, இங்கு கோவில் கொண்டிருக்கும் முருகபெருமானுடன் சண்டையிடும் நிலை ஏற்பட்டது. முருகனுடனான சண்டையில் தோற்ற இடும்பன் முருகனின் பக்தனானான். இரண்டு மலைகளை தூக்கி வந்த இடும்பனை கௌரவிக்கும் விதமாக பழனி மலை முருகனுக்கு காவடி தூக்கி செல்லும் வழிபாடு முறை உண்டானது.

இந்த பழனி மலை முருகன் ஆண்டியாக தோற்றமளிக்க காரணம் கல்வியை பயிற்றுவிக்கும் ஆசிரியர் எப்படி கையில் கொம்பை வைத்துக்கொண்டு மாணவர்களை அடிக்காமல், அவர்களை அதட்டி கல்வியை கற்பிக்கிறாரோ அது போல் வாழ்க்கையில் எல்லாவற்றிலும் இருக்கும் நிலையாமையை நினைவுறுத்தி, மக்களை ஞானப்பாதைக்கு திருப்பும் “ஞானாசிரியனாக” இத்தலத்தில் கையில் தண்டத்துடன் காட்சியளித்து தண்டாயுதபாணியாக இருக்கிறார்.

தல சிறப்பு திருவண்ணாமலை அருணாச்சல மலையை மக்கள் சித்ராபவுர்ணமி அன்று எவ்வாறு கிரிவலம் வருகின்றனரோ அதுபோல் அக்னி நட்சத்திர நாளில் பக்தர்கள் இப்பழனி மலையை கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மலையை கிரிவலம் வந்த பின்பு, 450 மீட்டர் உயரமா உள்ள மலையை 690 படிகள் எறிகடந்து வர வேண்டும்.

நடந்து மலையை ஏற முடியாதவர்களுக்கு மலைக்கு மேல் செல்வதற்கு ரோப் கார் வசதியும் இருக்கிறது. இங்கிருக்கும் முருகப்பெருமானுக்கு நல்லெண்ணெய், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி என்ற நான்கு பொருட்களை கொண்டு தான் அபிஷேகம் செய்யப்படுகிறது. பன்னீர் அபிஷேகம் மார்கழி மாதத்தில் மட்டும் செய்யப்படுகிறது. சந்தனம், பன்னீர் தவிர்த்து மீதி அபிஷேக பொருட்கள் எல்லாம் முருகன் விக்கிரகத்தின் தலையில் வைத்து எடுத்துவிடுகின்றனர்.

முருகன் சிலை மீது வைத்து எடுக்கப்படும் “சிரசு விபூதி” சித்தர்களின் உத்தரவின் பேரில் பக்தர்களுக்கு வழங்கப்படும் அரிதான பிரசாதமாகும். பொதுவாக சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடக்கும். ஆனால் பழனி முருகன் கோவிலில் விஷேஷ நட்சத்திர தினங்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. ஒரு நாளில் ஆறு முறை முருகனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்படுகிறது.

ஒரு முறை அபிஷேகம் செய்து அலங்காரம் செய்த பின்பு பூக்கள் அர்ச்சனை, மாலை சாற்றுவது போன்ற எதுவும் செய்யப்படுவதில்லை. திருப்பதி கோவிலின் பிரசாதமாக லட்டு எவ்வாறு புகழ் பெற்றுள்ளதோ, அதுபோல் பழனி தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட பழனி பஞ்சாமிர்தம் உலகப்புகழ் பெற்றது. இக்கோவிலின் பஞ்சாமிர்த பிரசாதத்தை சாப்பிடுபவர்களுக்கு அவர்களின் உடலில் இருக்கும் நோய்கள் நீங்குகிறது என்பது அனுபவம் பெற்றவர்களின் உறுதியான வாக்கு.

மேற்குத்திசையில் இருக்கும் கேரள மாநிலத்தை பார்த்தவாறு தண்டாயுதபாணி இந்த கோவிலில் வீற்றிருப்பதால், மலையாள பக்தர்கள் மிக அதிகளவில் பழனி முருகன் கோவிலுக்கு வந்து வழிபடுகின்றனர். தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் கோடிக்கணக்கில் பக்தர்களின் காணிக்கையை பெரும் கோவிலாக பழனி மலை முருகன் கோவில் இருக்கிறது.

பழனியாண்டவரை வழிபடும் பக்தர்கள் சிலர் தங்களின் தொழில், வியாபாரங்களில் கூட்டாளியாக கருதி, மிகுந்த லாபம் பெற்ற பிறகு அந்த லாபத்தில் பழனி முருகனுக்குரிய பாகத்தை காணிக்கையாக இக்கோவிலின் உண்டியலில் செலுத்துகின்றனர். திருப்பதியில் எப்படி தலைமுடியை மொட்டையடித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனரோ அது போல் பழனி முருகனுக்கும் முடியிறக்கி காணிக்கை செலுத்துகின்றனர்.

இங்கிருக்கும் போகர் சித்தரின் சமாதியில் வழிபடுவதால் இன்றும் சூட்சம வடிவில் இந்த பழனி மலையில் வாழ்ந்து கொண்டிருக்கும் போகர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்தருள்கிறார். ஆன்மீக ஞானம் பெற, திருமணம், குழந்தை பாக்கியம், வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் மேன்மை போன்றவற்றிற்காக அதிகளவில் பக்தர்கள் இங்கு வந்து வேண்டி கொள்கின்றனர்.

கோவில் அமைவிடம் அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழநி என்கிற ஊரில் இருக்கும் பழனி மலை மீது அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு செல்ல அதிகளவில் போக்குவரத்து வசதிகள் உள்ளன. கோவில் நடை திறந்திருக்கும் நேரம் பழனி மலையில் இருக்கும் தண்டாயுதபாணி கோவில் உட்பட அத்தனை கோவில்கள், சந்நிதிகளும் காலை 6 மணிமுதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

பழனி முருகன் தீர்த்த காவடி பழத்தால் உருவான ( பழம் நீ ) பழனி பழனி குன்று இருக்குமிடமெல்லாம் குமரன் இருப்பான். அறு படை வீடு கண்டவன் ஆறுமுகன். முருகன் என்றால் முதலில் நினைவுக்கு வருவது இந்தப் படை வீடுகள்தான். திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருச்செந்தூர், திருத்தணி, பழமுதிர்சோலை ஆகிய ஆறு முருகன் தலங்களும் அறுபடை வீடு என அழைக்கப்படுகிறது. பழனி அறுபடை வீடுகளில் பழமையானது.

இங்கு முருகப் பெருமான் கோவணாண்டியாக கையில் தண்டத்துடன் காட்சியளிக்கிறான். அதனால் முருகனுக்கு தண்டாயுதபாணி என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது. 450 அடி உயரத்தில் பழனி மலை அமைந்துள்ளது. மலைக்கு 697 படிகள் ஏறி செல்ல வேண்டும். மலை மீது செல்ல விஞ்ச் எனப்படும் இழு வண்டியும் உள்ளது இதன் மூலம் மலையை 8 நிமிடத்தில் அடைந்து விடலாம்.

இந்த விஞ்ச் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்குகிறது. தல வரலாறு: கலகத்திற்கு பெயர் போன திரிலோக சஞ்சாரி நாரதர், யாருக்கும் கிடைக்காத அரிய மாம்பழத்தை சிவ பெருமானிடம் கொண்டு வந்து கொடுத்தார். அந்த பழத்தை பெற விநாயகருக்கும், முருகனுக்கும் கடும் போட்டி. யார் முதலில் உலகை சுற்றி வருகிறார்களோ அவர்களுக்குத்தான் அந்த பழம் என முடிவாகிறது. இதையடுத்து உலகைச் சுற்றி வர தன் வாகனமான மயில் மீது ஏறி கிளம்பினார் முருகப் பெருமான்.

விநாயகரோ விவரமானவர். தாய், தந்தையே உலகம் என கூறி சிவனையும், உமையையும் சுற்றி வந்து பழத்தை பெற்றுக் கொண்டார். ஏமாற்றப்பட்டதாக கோபம் கொண்ட முருகன், பெற்றவர்களிடம் கோபம் கொண்டு, உடைகளைத் துறந்து, ஒரு முழக் கோவணத்துடன் குன்றின் மீது வந்தமர்ந்தார்.

முருகன் வந்து அமர்ந்த இடம் தான் பழனி என கூறப்படுகிறது. முருகனே ஞானப்பழம். மாம்பழம் கிடைக்காமல் அவன் வந்து அமர்ந்த இடம் இது. முருகனைச் சமாதானப்படுத்த முயன்ற பார்வதி, முருகா நீயே ஞானப்பழம் உனக்கெதற்கு பழம். பழத்தின் காரணமாக, பழமான நீ வந்த அமர்ந்த இடம் இனி பழம் நீ என அழைக்கப்படும் என திருவாய் மலர்ந்தருளினார் உமையவள். பழம் நீ என்பதுதான் மருவி பழனி (பழநி) என்றாகி விட்டது.

மேலும் மீது கோபம் கொண்டு நீ குன்றின் அமர்ந்ததால் இனி குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாகும் என உமையவள் கூறினாள். இன்றும் குன்றிருக்கும் இடமெல்லாம் குமரனை, முருகனை காணலாம். பழனி தமிழகத்தில், திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த பழனி மலை புனிதமான சித்தர்கள் வாழ்ந்த இடம். பழனியில் இருக்கும் தண்டாயுதபாணி சிலை போக சித்தர் என்பவரால் வெகு காலம் முன் நிர்மாணிக்கப்பட்டது.

காலம் எது என்பது உறுதியாகத் தெரியவில்லை. பழனி மலை இடும்பன் மலைக்கு அருகே உள்ளது. பழனி மலை முருகனுக்கு நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கு முருகனுக்கு செய்யப்படும் ராஜ அலங்காரத்தை காண கண் கோடி போதாது. அதே போல் முருகன் வெள்ளி ரதத்திலும், தங்க ரதத்திலும், தங்க மயில் வாகனத்திலும் வலம் வரும் காட்சி கண் கொள்ளாக் காட்சியாகும்.

முருகனுக்கு செய்யப்படும் ஒவ்வொரு அபிஷேகமும் கண் கொள்ளாக் காட்சி. இங்கு பிரார்த்தனை செய்து கொண்டு காவடி எடுத்துச் சென்றால் நிறைவேறாத காரியமும் நிறைவேறும் என்பது திண்ணம். பழனி மலை முருகன் தரிசனம் கண்ணுக்கு விருந்து. அங்கு கிடைக்கும் பஞ்சாமிர்தம் நாவிற்கு விருந்து. திருப்பதி என்றால் பெருமாளும் லட்டுவும் நினைவுக்கு வரும்.

அதே போல் பழனியில் திகட்டாத பஞ்சாமிர்தமும், நறுமணம் நிறைந்த விபூதியும் பிரசித்தியானவை. பஞ்சாமிர்தம் – பஞ்ச என்றால் ஐந்து. அமிர்தம் என்றால் முக்தி தரும் பிரசாதம். பழனியில் உண்மையாகவே 5 பழங்களையும், கல்கண்டையும் கலந்து பஞ்சாமிர்தம் செய்யப்படுகிறது. முருகனுக்கு அபிஷேகம் செய்யபட்ட பின் இது விநியோகிகப்படுகிறது. முருகன் அருளும் பிரசாதமான இது முக்தியும் தரும் என பக்தர்கள் பஞ்சாமிர்தம் பெற்று செல்கிறார்கள்.

தூய வெண்நிறத்தில் நறுமணம் கமழும் விபூதி இங்கு கிடைப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். முக்கிய திருவிழாக்கள்: * சித்திரைத் திருவிழா: பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலில், ஏப்ரல் – மே மாதத்தில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழா 10 நாட்கள் பழனி நகரில் இருக்கும் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் கொண்டாடப்படும். சித்ரா பெளர்ணமியன்று முருகன், வள்ளி, தெய்வானை சமேதரராக வெள்ளித் தேரில் பவனி வருவார். மறுநாள் தங்க ரதத்தில் முருகன் பழனியை வலம் வருவார்.

* அக்னி நட்சத்திர விழா: மே மாதம் 14 நாட்கள் கொண்டாடப்படுகிறது.

* வைகாசி விசாகம்: அருள்மிகு பெரியநாயகி அம்மன் கோவிலில் மே-ஜுன் மாதங்களில் கொண்டாடப்படுகிறது.

* தைப் பூசம்: பழனியின் மிகப் பிரசித்தமான திருவிழா. ஜனவரி- பிப்ரவரி மாதத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. முருக பக்தர்கள், காவடி தூக்கி, பாதயாத்திரையாக பழனி மலைக்கு வருவது வழக்கம்.

* ஸ்கந்த சஷ்டி விழா: இந்த விழா 6 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இது சூரபத்மனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழாவாகும்.

* திருக்கார்த்திகை: நவம்பர்- டிசம்பர் மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. தினமும் முருகன் தங்க ரதத்தில் பவனி வருவார். கார்த்திகை தினத்தன்று தங்க மயில் வாகனத்தில் பவனி வருவார்.

* பங்குனி திருவிழா: மார்ச் – ஏப்ரல் மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது புகழ் பெற்ற பலரும் வந்து சொற்பொழிவு ஆற்றுவார்கள்.

கலை நிகழ்ச்சிகளும் நடை பெறும். திருஆவினன்குடி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள இக்கோவிலின் பெயர் குழந்தை வேலாயுதசுவாமி கோவில் ஆகும். இந்த இடத்தின் பெயர் திரு ஆவினன்குடியாகும். இக்கோவிலே உண்மையில் மூன்றாவது படைவீடாகும். இக்கோவிலுடன் இணைந்து ஒரு குளம் உள்ளது. முருகனின் பழமையான கோவில் திருஆவினன்குடி ஆகும்.

இங்கு முருகன் நெல்லி மர நிழலில் கோவில் கொண்டுள்ளார். இங்கு முருகன் குழந்தையாக மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். முருகன் ஒரு அரசரைப் போல் உயரமான கருவரையில் உள்ளார். அதனால் பக்தர்கள் அவரை மிகவும் நன்றாக காண முடியும். இங்கு பிரதான கோவில், நெல்லி மரம், நாகலிங்கப் பூ மற்றும் அருணகிரிநாதர் ஆலயம் ஆகியவை தரிசிக்க வேண்டியவை ஆகும்.

திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோவில், சண்முகாநதி கோவில்கள், இடும்பன் மலை, விஷ்ணு கோவில், பட விநாயகர் கோவில், மலையைச் சுற்றியுள்ள 108 விநாயகர் கோவில்கள், கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல் பூம்பாறையில் உள்ள வேலப்பர் கோவில் ஆகிய கோவில்கள் பழனி தண்டாயுதபாணி சுவாமி தேவஸ்தானத்தின் ஆளுகைக்கு உட்பட்டவை ஆகும்.

மலையில் இரவு தங்குதல் பழனி மலையில் இரவு தங்குவதற்கு ஆண்டு முழுவதும் யாரும் எப்போதும் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால் ஒவ்வோர் ஆண்டும் ஒரே ஒரு நாள் மட்டும் சேலம் மாவட்டம் இடைப்பாடி நகரைச் சேர்ந்த பர்வதராஜகுலத்தைச் (மீனவர்) சேர்ந்த மக்கள் இரவு தங்குவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.

பல நூறு ஆண்டுகளாக (சுமார் 300) பரம்பரை பரம்பரையாக இந்த வழக்கம் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் தை மாதம் தைப்பூசம் முடிவுற்ற பிறகு இச்சமுதாயத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் பழனிக்கு காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வருகிறார்கள்.

அதே நாளில் இச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் சேலம், கும்பகோணம், தாரமங்கலம், சென்னை, தஞ்சாவூர், கடலூர் மற்றும் தமிழகத்தின் பிற ஊர்களிலிருந்தும் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து சேர்கிறார்கள்.

இந்த நடைப்பயணத்தின் போது பர்வதராஜகுல சமுகத்தினரோடு மற்ற சமுகத்தினரும் நடைப்பயணம் மேற்கொண்டு முருகனை தரிசிக்க வருகிறார்கள். நடைப்பயணத்தின் போது பர்வதராஜகுல அன்னதான கமிட்டி மூலம் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள அனைத்து சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோருக்கும், அனைத்து தினங்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

ஆகவே அனைத்து சமூகத்தினரும் பர்வதராஜகுல சமூகத்தினரோடு இணைந்து நடைப்பயணம் மேற்கொண்டு முருகனை தரிசித்து பழனி மலையில் இரவில் தங்கி இறைவன் அருள் பெற்று இன்பமடைகின்றனர்.

பூஜைகள் முருகனுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுகிறது. காலை 5 மணிக்கு முருகன் விஸ்வரூப தரிசனம் அளிக்கிறார். காலை 7.15 மணிக்கு விழாபூஜை நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு காலசாந்தி பூஜையும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6 மணிக்கு சாயரட்சையும், இரவு 8 மணிக்கு ராக்கால பூஜையும் நடைபெறுகிறது.

தங்கரதம் ஒவ்வொரு கிருத்திகை தினத்தன்றும் மற்றும் விசேஷ நாட்களிலும் இரவு 7 மணிக்கு மலையில் கோவில் பிரகாரத்தைச் சுற்றி தங்கரதம், நாதஸ்வரம், திருப்புகழ் இசை மற்றும் கோவில் பரிவாரங்களுடன் வலம் வருகிறது. பக்தர்களும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்ற தங்கரதம் இழுக்கிறார்கள்.

தங்கரதம் இழுக்க கிருத்திகை தினங்களில் ரூ. 2000மும் மற்ற சாதாரண நாட்களில் ரூ.1500மும் கட்டணம் செலுத்த வேண்டும். இக்கட்டணம் மாலை 4.30 மணிக்குள் தேவஸ்தான அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும். தைப்பூசம், பங்குனி உத்திரம், தசரா பண்டிகையின் பத்து நாட்கள், சூரசம்ஹாரம், கார்த்திகை தீபம் ஆகிய நாட்களில் தங்கரதம் வலம் இல்லை.

மயில் வாகனத்தில் முருகன் பவனி வர கட்டணம் ரூ. 300 ஆகும். விழாக்கள் பங்குனி உத்திரம், தைப்பூசம், கந்த சஷ்டி, அக்னி நட்சத்திரம் ஆகிய விழாக்கள் முக்கியமானவையாகும். வைகாசி விசாகம், திருக்கார்த்திகை மற்றும் பிற பண்டிகைகளும் இங்கு கொண்டாடப்படுகின்றன.

காவடி மற்றும் நடைப்பயணம் பக்தர்கள் காவடி கட்டி நடைப்பயணம் மேற்கொண்டடு வந்து முருகனை வழிபடுவது மிகவும் சிறப்பான வழக்கமாகும். லட்சக்கணக்கானோர் தைப்பூசத் திருநாளன்று காவடிகட்டி நடைப்பயணம் மேற்கொண்டு இங்கு வந்து முருகனை தரிசிக்கின்றனர்.

கோவில் முகவரி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோவில் பழனி திண்டுக்கல் மாவட்டம் – 624 601

Advertisements

Leave a Reply