Cough is cured

Cough is cured

0
120
Cough is cured
Cough is cured

இருமல் குணமாக

இருமல் தீர: ஆடாதோட இலை சாறு தேன் கலந்து சாப்பிடலாம்.

இருமல் குணமாக: இன்புறா,வல்லாரை நீரில் கஷாயம் செய்து சாப்பிடலாம்.

இளைப்பு, இருமல் குணமாக: விஷ்ணுகிராந்தி பொடியை வெந்நீரில் கலந்து குடிக்கலாம்.

இருமல் குணமாக: வெந்தயக்கீரை சமைத்து சாப்பிட்டு வரலாம்.

வரட்டு இருமல் குணமாக: மிளகுடன் பொரிகடலை சேர்த்து பொடியாக்கி ஒவ்வொரு ஸ்பூன் 3 வேளை உண்ணலாம்.

இருமல் குணமாக: பிரமிய வழுக்கை இலையை அரைத்து மார்பில் கட்டிவர சளி மிகுதியால் இருமல் குணமாகும்.

இருமல் தீர: முற்றிய வெண்டைக்காயைச் சூப் செய்து குடிக்கலாம்.

சீதன இருமல் தீர: ஓமவல்லி இலைசாறை சர்க்கரை அல்லது தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

இருமல் தீர: கண்டங்கத்தரிவேர், ஆடாதோடா வேர், திப்பிலி கஷாயம் செய்து 50 மி.லி குடிக்கலாம்.

இருமல் குணமாக: செந்நாயுருவி வேர்ப்பட்டை மிளகு கலந்து கால்கிராம் தேனில் கலந்து காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.

இருமல் தீர: மாதுளம்பூ பொடியுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை 1 தேக்கரண்டி சாப்பிட்டு வரலாம்.

இருமல் குணமாக: இஞ்சி சாறு, மாதுளம் பழச்சாறு தேன் கலந்து குடிக்கலாம்.

இருமல், சளி குணமாக: கஞ்சாங்கோரை இலை சாறு 20 துளி பாலுடன் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Advertisements

Leave a Reply