Heal mucus

Heal mucus

0
94
Heal mucus
Heal mucus

சளி குணமாக

சளித்தொல்லை குணமாக: நத்தைசூரி இலை சாறை 15மி.லி. காலை, மாலை சாப்பிடலாம்.

சளி தீர: மாதுளம் பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு கலந்து குடித்து வரலாம்.

சளியை அகற்ற: துளசியை அவித்து சாறு பிழிந்து குடிக்கலாம்.

மார்பு சளி தீர: பொடுதலை, இஞ்சி, புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை துவையல் சுடுசோறு  நெய்யில் உண்ணலாம்.

சளி சுரம் தீர: முசுமுசுக்கை இலை தோசை மாவுடன் அரைத்து தோசை சாப்பிடலாம்.

சளி தேக்கம் நீங்க: வல்லாரைபொடி, தூதுவளை பொடி பாலில் கலந்து குடிக்கலாம்.

நெஞ்சுச் சளி குணமாக: தேங்காய் எண்ணெயில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவலாம்.

மார்பு சளி நீங்க: தூதுவளைன் சாறு நெய்யில் காய்ச்சி காலை, மாலை சாப்பிட்டு வரலாம்.

மார்பு சளி தீர: இஞ்சி சீனி சேர்த்து செய்த இஞ்சி முரப்பா சாப்பிடலாம்.

மார்பு சளி தீர: சுண்டைக்காயை உப்பு நீரில் ஊறவைத்து காய வைத்து வறுத்து சாப்பிடலாம்.

மார்பு சளி தீர: கோவைகிழங்கு சாறு 10மி.லி குடித்து வரலாம்.

சளியைப் போக்க: நஞ்சறுப்பான் இலையை பொடி செய்து 1 கிராம் வெந்நீரில் சாப்பிடலாம்.வியர்வை பெருகும்.

நீர்க்கோவை, சளி காய்ச்சல் தீர: அறுகீரை நெய் சேர்த்து உண்டு வரலாம்.

நுரையீரல், சளி இருமல் தீர: பிரமதண்டு இலை பொடி, விதை பொடி தேனில் கலந்து சாப்பிடலாம்.

Advertisements

Leave a Reply