Fever is cured

0
50
Fever is cured
Fever is cured

காய்ச்சல் குணமாக

ஒத்தடம்: குளிர் நீர் ஒத்தடம் கொடுக்க சுரம் குறையும்.கொதிநீ ஒத்தடம் கொடுக்க வலி, வீக்கம் குறையும்.

காய்ச்சல் நீங்க: வேப்பிலையை வறுத்து சூட்டோடு தலைக்கு வைத்து தூங்கலாம். தூக்கம் நன்றாக வரும்.

வாதசுரம்,மலச்சிக்கல் தீர: பேய்மிரட்டி இலை கஷாயம் செய்து குடிக்கவும்.

விடாத வாதசுரம் தீர: பேய்மிரட்டி இலையை கொதிக்க வைத்து வேத் பிடிக்கவும்.

மலேரியா காய்ச்சல் குணமாக: மிளகு, சீரகம் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

காய்ச்சல் நீங்க: வல்லாரை இலை, உத்தமானி இலை, மிளகு சேர்த்து கஷாயம் செய்து கொடுக்கலாம்.

மஞ்சக்காமாளை தீர: வில்வ இலைபொடி, கரிசலாங்கண்ணி சாறு கலந்து1 கரண்டி கொடுக்கலாம்.

எவ்வித காய்ச்சலும் தீர: வில்வ இலை, சுக்கு, மிளகு, சீரகம் கஷாயம் செய்து குடிக்கலாம்.

காய்ச்சல், தாகம் தீர: கோரைக்கிழங்கு கஷாயம் குடித்தால் நல்லது.

கடுங்க்காய்ச்சல் குணமாக: கோரைக்கிழங்கை கழுவி சுத்தம் செய்து நீர்விட்டுக் காய்ச்சிக் குடிக்கலாம்.

எலும்புக் காய்ச்சல் தீர: நெல்லிக்காய் லேகியம் சிறு உருண்டை காலை மாலை சாப்பிட்டு வரத் தணியும்.

காய்ச்சல் சரியாக: நார்த்தங்காய் செடி இலைகளை கஷாயம் செய்து குடிக்கலாம்.

தாகசுரம் நீங்க: கானாவாழை சமூலம், மிளகு, சீரகம் கஷாயம் செய்து காலை மாலை 2 நாட்கள் குடிக்க தாகசுரம் நீங்கும்.

Advertisements

Leave a Reply