Grow hair well – grow it black – foam properly

0
38
Grow hair well - grow it black - foam properly
Grow hair well - grow it black - foam properly

தலைமுடி நன்கு வளர – கருப்பாக வளர – நரை சரியாக

முடி உதிர்வது நிற்க: கோபுரம்  தாங்கி இலைசாறை நல்லெண்ணையில் காய்ச்சி தலை முழுகினால் தலைமுடி உதிராது.

முடி அடர்த்தியாகவும் நீண்டும் வளர: சடாமஞ்சளை நல்லெண்ணெயில் காய்ச்சி வாரம் 1 முறை தலைக்கு தேய்த்து குளித்து வரவும்.

முடி நன்றாக வளர: காரட், எலும்பிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி தேய்த்து வரலாம்.

செம்பட்டை முடி நிறம் மாற: மரிகொழுந்து இலையையும், நிலாவரை இலையையும் சம அளவு எடுத்து மைய அரைத்து தலைக்கு தடவி வந்தால் சில நாட்களில் நிறம் மாறும்.

முடி நன்றாக வளர: செம்பரத்தை பூவை நல்லெண்ணெயில் காய்ச்சி தடவ முடி நன்கு வளரும்.

இளநரை மாற: கரிசாலை இலை பூக்காத கொட்டை இலை சம அளவு பொடி தேனில் கலந்து அரக்கரண்டி சாப்பிட்டு வரவும்.

இளநரை மாறைய: நெல்லிக்காய், நெல்லிக்காய் ஊறுகாய், நெல்லி வற்றல் சாப்பிட்டு வரலாம்.

நரை குறைய: மூளைகிரை வாரம் ஒரு நாள் தொடர்ந்து சாப்பிட்டு வர குணமாகும்.

நரைமுடி கருமையாக: கையாந்த கரை சாறு பசுநெய், தயிர் கலந்து சாப்பிட்டு வர நரைமுடி கருமையாகும்.

முடி கருமையாக, முடி உதிர்வது நிற்க; காய்ந்த நெல்லிகாயை பவுடராக்கி தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து கொதிக்க வைத்து வடிகட்டி, தேய்த்து வரலாம்.

முடி உதிர்வது நிற்க: வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பலன் கிடைக்கும்.

முடி உதிர்வது நிற்க: நில ஆவாரை கஷாயம் தலையில் தடவிவர முடி உதிர்வது நிற்கும்.

Advertisements

Leave a Reply