Headache is healed

Headache is healed

0
61
Headache is healed
Headache is healed

மண்டை குடைச்சல் தீர: தழுதாழை இலை சாறு மூக்கில் உறிஞ்சி வர தீரும்.

தலைசுற்று, கிறுகிறுப்பு குணமாக: நெல்லிக்காய் சாறு 1 அவுன்ஸ் குடிக்கவும்.

தலைவலி குணமாக: அகத்தி இலை சாறு எடுத்து நெற்றியில் தடவலாம்.

ஒற்றை தலைவலி குணமாக: எட்டி மரக்கொழுந்து, மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வரலாம்.

தலைவலி நீங்க: குங்குமப்பூவை தாய்ப்பால் விட்டு அரைத்து நெற்றியில் பற்று போடலாம்.

தலைவலி குணமாக: வெற்றிலை காம்பு, லவங்கம், ஆலஅரிசி சமஅளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றி பொட்டில் உச்சந்தலையில் தடவ குணமாகும்.

மண்டை குடைச்சல் தீர: நொச்சி இலையை தலையணையாக பயன்படுத்தலாம்.

எவ்வித தலைவலியும் தீர: மிளகாய் வற்றல், மிளகு நல்லெண்ணெயில் காய்ச்சி வாரன் 1 நாள் தலை முழுகி வரலாம்.

மண்டை குடைச்சல் தீர: வில்வ இலை பொடி அரைக்கரண்டி தேனில் சாப்பிடலாம்.

தலைவலி நீங்க: மரிகொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக்கட்டு போடலாம்.

தலை சுற்றல், இரத்த கொதிப்பு தீர: நெல்லி வற்றல், பச்சை பயறு கஷாயம் காலை,மாலை சாப்பிடலாம்.

தலைவலி குணமாக: பிரண்டை எண்ணெய் தேய்த்து வரலாம்.

தலைவலி, சுரம் தீர: காக்கிரட்டான் வேர் கஷாயம் சாப்பிடலாம்.

மண்டை கொதிப்பு: கோபுரம் தாங்கி இலைசாறு நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகி வரலாம்.

தலைவலி குணமாக: சுக்கை அரைத்து போடலாம்.

Advertisements

Leave a Reply