என்னை பற்றி

கடவுள் மனிதனை படைத்து அவன் இனிது வாழ நீர், நிலம், நெருப்பு காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களையும் படைத்து இந்த பிரபஞ்சத்தில் சூரிய சந்திரர்களின் அருளினால் மலை, நதி, நந்தவனம், செடி, கொடி அழகிய நறுமணம் வீசும் மலர்கள் முதலியவைகளுடன் அவன் இனிது வாழ வழி செய்தார்.

ஆதிமனிதன் மரங்களிலும், குகைகளிலும் வசித்து வந்தான். அவன் நாகரீகம் அடைந்தபோது இயற்கையின் சீற்றத்திலிந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள “வீடு” என்ற ஒர் அமைப்பை ஏற்படுத்திக் கொண்டான். நாளடைவில் அந்த வீட்டை தனக்கு “சாதகமாக அமைக்க கற்றுக்கொண்டான். அன்று தோன்றியதுதான் “வாஸ்து சாஸ்திரம்” அதாவது மனிதன் அனுபவமே “வாஸ்து சாஸ்திரம்” ஆனாது.

வானவியல் சாஸ்திரம் தோன்றும் முன்பே அனுபவ வாஸ்து சாஸ்திரம் உருவாகியுள்ளது. ஆனால் அவை வெளி உலகில் அறியப்பட்டது பிற்காலத்தில் தான். நியுமராலஜி போன்ற அதிஷ்டவியல் சாஸ்திரங்கள் 20 ம் நூற்றாண்டில் தான் தோன்றியுள்ளன.

வாழ்க்கை என்பது ஒரு வாய்ப்பு. ஒரு வாய்ப்பு என்று சொல்வதை விட ஒரே ஒரு வாய்ப்பு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். அந்த அற்புதமான வாய்ப்பை நாம் எப்படிப் பயன்படுத்தப்போகிறோம் என்பதைப் பொறுத்துத்தான் நமது வாழ்க்கையே அமைகின்றது என்றார், ஒர் அறிஞர்.

அப்படிப்பட்ட வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்ந்திடவே சாஸ்திரங்கள் வழி காட்டுகின்றன.

எத்தனையோ பெரிய மகான்களும், ரிஷிகளும், வல்லுநர்களும் இதைப் பற்றி எழுதியுள்ளனர். ‘இளங்கன்று பயமறியாது’ என்பார்கள். சந்திர மண்டலம் போய் வந்தவர் மட்டும்தான் சந்திரனைப் பற்றி எழுத முடியும் என்றால், இவ்வளவு கவிதைகளும், கற்பனைகளும் நமக்குக் கிடைத்திருக்குமா? அறிவு என்பது கல்வியினாலும், கேள்வியினாலும், அனுபவத்தாலும் ஏற்படுகிறது.

எனவே, நான் படித்த சாஸ்திரங்கள், வாஸ்து அறிஞர்களின் அனுபவங்கள், அவர்களுடன் எனக்கேற்பட தொடர்பு ஆகியவற்றைக் கொண்டும் இந்த சிறு சிறு பதிப்புகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள துணிந்தேன்.

எனது கட்டுமான நிறுவனம் பொன்னமராவதியை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது. உங்களுக்கு ஏற்படும் வாஸ்து சந்தேகங்களை தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ கேள்விகளை அனுப்பிவையுங்கள் உங்களுக்கு பதில் உடனே கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.

Advertisements