Monday, December 16, 2019
Advertisements
Home Blog Page 13
பொதுவாக ஒரு வீட்டைக்கட்டும் போது மரத்தினால் செய்யப்பட்ட பொருள்கள் அதிகமாக  உபயோகப்படுத்தப்படுகின்றன. கதவு, ஜன்னல், கதவிற்கான ஃபிரேம், ஜன்னலுக்கான ஃபிரேம், வாசற்கால், உத்திரம் போன்றவை மரத்தினால் உருவாக்கப்படுகின்றன. ஆனால் அத்தகையை பொருள்களைத் தயாரிப்பதற்காக மரங்களை வாங்குபோதும் கவனமாக இருக்க வேண்டும். மரங்களின் தன்மைகேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும். மரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. ஆண் மரம், 2. பெண் மரம், 3. அலி மரம். மூன்று வகையான மரங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். ஒரே சீரான அளவுடன் உருண்டு திரண்டு...
எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். அதே போன்று நாம் அமைக்க இருக்கும் வீட்டிற்குத் தலைவாசல் பிரதானம். தலைவாசல் என்பது அந்த வீட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதாகும். தலைவாசல் பழங்காலத்தில் கீழ்க்கண்டவாறு அமைத்தார்கள். I – பழைய சித்தாந்தம் அல்லது முறை : 1. கிழக்குப் பார்த்த வீடு : கிழக்குப் பார்த்த வீட்டிற்கு முன்பாக நின்று வலதுபுறம் முதல் இடப்புறம் வரை (ஈசான்ய முதல் அக்னிவரை) 9 பிரிவுகளாகப் பிரிக்க வேண்டு அதைச் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி, ராகு, கேது என்று முறையே பிரிக்க...
ஜன்ம லக்கனத்திற்கு நான்கு அல்லது பத்தாவது ஸ்தானததில் சந்திரன் நிற்க, குரு, செவ்வாய், சனி ஆகியோர் பதினோராவது ஸ்தானத்தில் நிற்க மனை முகூர்த்தம் செய்தால் அங்கு கட்டடப்படும் கட்டடமானது நூறு ஆண்டுகள் வரை அழிந்து போகாமல் நிலைத்து நிற்கும். லக்கனத்தில் குருவும் சுக்கிரனும் இருக்க ஐந்து அல்லது மூன்றில் சூரியன் இருக்க ஆறில் செவ்வாய் இருக்க மனைமுகூர்த்தம் செய்தால் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்கள் நூறாண்டுகள் வரை சிறப்பாக வாழ்வார்கள். லக்கினத்தில் அல்லது பத்தில் சுக்கிரன் இருக்க மூன்றில் புதன் இருக்க, மனை முகூர்த்தம் செய்தால்...
வாஸ்துவில் மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டிய ஆறு அடிப்படை விதிகள். அவை : (1) ஒரு மனை மற்றும் அதனுள் அமைக்கப்படும் கட்டடம் சதுரம் அல்லது செவ்வகமாக இருத்தல் அவசியம். (2) ஒரு கட்டடம் கட்டும் போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியை விட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் அவசியம். (3) ஒரு இடத்தின் வடகிழக்கு பகுதி பள்ளமாகவும் / கனமில்லாமலும், தென்மேற்கு பகுதி உயரமாகவும் / கனமாகவும் இருத்தல் அவசியம். (4) ஒரு இடத்திற்கு அமைக்கப்படும் தலைவாசல் கட்டாயம் உச்சத்தில் தான் இருக்க...
மனையைத் தேர்ந்ததெடுத்தபின் அம்மனையில் வீடு கட்டத்திட்டமிடுகிறோம். தேர்ந்த கட்டடக் கலைஞர்களைக் கொண்டோ, கட்டடப் பொறியாளர்களைக் கொண்டோ வரைபடம் தயாரிக்கிறோம். அப்படத்திற்கு ஆட்சி ஒப்புதல் பெறுகிறோம். கட்டடம் கட்டத் தேவையான நிதி வசதிகளைத் திரட்டுகிறோம். இவ்வாறு ஆயத்தமானவுடன், நல்ல நாளும், நல்ல ஒரையும் குறித்து (சோதிடப் படியோ, வாஸ்து விழித் தெழு நாளிலோ ) கட்டட வேலை துவங்குவதற்கான முதற்படியாக பூமி பூசை செய்ய வேண்டும். பூமி பூசை செய்வதற்கு முன் செய்ய வேண்டுவன யாவை? 1. மனையைத் தூய்மையாக்க வேண்டும். கற்கள், புற்பூண்டுகள், செடி, கொடிகள் குப்பைகள்...
ஒருவர் மனைகோலச் செல்லும்போது அல்லது கிரகப்பிரவேசம் செய்யப்போகும் போது அவர் செல்லும் திசை சூல திசையாக இருக்கக்கூடாது. ஒவ்வொரு கிழமையிலும் ஒரு திசையானது சூல திசையாக இருக்கிறது. அதைத் தெரிந்து கொண்டால் சூல திசையாக இருக்கும் கிழமையைத் தவிர்த்து விடலாம். கிழமை - சூலதிசை திங்கட்கிழமை - கிழக்குத் திசை செவ்வாய்க்கிழமை - வடக்குத் திசை புதன்கிழமை - வடக்குத் திசை வியாழக்கிழமை - தெற்குத் திசை வெள்ளிக்கிழமை - மேற்குத் திசை சனிக்கிழமை - கிழக்குத் திசை ஞாயிற்றுக்கிழமை - மேற்குத் திசை
மனை கோலுவதற்கு எற்ற யோகங்கள் அடுத்த படியாக மனை கோலுவதற்கு ஏற்ற யோகங்களைத் தெரிந்து கொள்ளலாம். சித்தம், பிரீதம், அகர்மம், சோபனம், திருதி, துருவம், செளபாக்கியம், ஆயுஸ்மான், சுப்பிரம், சிவம், சாத்தியம், மகேந்திரம், பிராமியம், சுபம் ஆகிய பதினான்கு போகங்களும் மனை கோல ஏற்றவையாகும். அந்த யோகங்களில் மனை அல்லது வீடு வாங்கினால் கட்டட வேலையை ஆரம்பித்தால் அல்லது கிரகப்பிரவேசம் செய்தால் அந்த வீட்டில் வாழ்பவர்கள் எல்லாவகையான சுகங்களுடனும் வாழ்வார்கள்.
மனை கோலுவதற்கு ஏற்ற நாட்கள்(கிழமை) மனை கோலுவதற்கு ஏற்ற மாதங்களைத் தெரிந்து கொண்டோம். அதேபோல் மனை கோலுவதற்கு ஏற்ற நாட்களையும் தெரிந்துகொள்வது அவசியமாகும். திங்கள், புதன், வியாழன், வெள்ளி ஆகிய நான்கு நாட்களும் மனை கோலுவதற்கு ஏற்ற நாட்களாகும். அந்த நாட்களில் மனை கோலினால் அந்த வீட்டில் வாழ்பவர்களுடைய வாழ்க்கையில் சுபீட்சம் நிலவும். சனி, ஞாயிறு, செவ்வாய், ஆகிய மூன்றும் மனை கோலுவதற்கு ஏற்ற நாட்கள் அல்ல. அக்கிழமைகளில் மனை கோலினால் அங்கு வாழ்பவர்களின் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடும்.
மனை கோலுவதற்க்கு ஏற்ற மாதங்கள் கட்டடம் கட்டத் தொடங்கும்போது மனைகோலப்படுகிறது. அதை நன்மை தரும் மாதங்களில் செய்ய வேண்டும். அப்போது தான் அங்கு கட்டப்படும் வீட்டில் வாழ்பவர்களுக்கு நற்பலன்களாக நடைபெறும். மனைகோலும்வதற்கு ஏற்ற மாதங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, ஐப்பசி, கார்த்திகை, தை, மாசி மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் எட்டு மாதங்களிலும் மனை கோலலாம். மற்ற நான்கு மாதங்களான ஆடி, புரட்டாசி, மார்கழி, பங்குனி ஆகியவற்றில் மனை கோலக்கூடாது. இவற்றில் ஒவ்வொரு ஜன்ம நட்சத்திரத்திற்கும் ஆகாத சூன்ய மாதங்கள் உள்ளன. எத்தகையை மாதங்களிலும் மனைகோலக்கூடாது. வீடு கட்டுபவர்...
மனைப் பொருத்தம் காண்பது என்பது மிகச்சிறந்த சற்று கடினமான ஆனால் அவசியமான கணித முறை ஆகும். இதற்கென பதினொரு விதமான பொருத்தத்தை நாம் பார்க்க வேண்டும். 11. வயதுப் பொருத்தம் முன்பு கண்ட துருவத்தை 27 ஆல் பெருக்கி 100 ஆல் வகுக்க மீதத்தை வயதுப் பொருத்தம் காணலாம். மீதம் இல்லையேல் 100 ஆம் எண்ணை மீதமாக கொள்ளலாம். 45 க்கு மேல் உத்தமம்                           45 க்கு கீழ் அதமம் இதுவரை நாம் கண்ட பதினோறு பொருத்தங்களில் குறைந்தபட்சம் ஆறு பொருத்தங்களாவது பொருந்தி வர வேண்டும்.
Advertisements
Advertisements